tamilnadu

img

தை பொங்கல்: கசந்த கரும்பு விற்பனை – வியாபாரிகள் கவலை

அவிநாசி, ஜன. 20- அவிநாசி பகுதியில் தைப்பொங் கல் கரும்பு வியாபாரம் கடும் வீழ்ச்சிய டைந்ததாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். தைத்திருநாள் என்றாலே பொது மக்கள் விரும்பி வாங்கும் பொருட்க ளில் ஒன்று கரும்பு. அந்த வகையில் தவிர்க்க முடியாதது கரும்பு. திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டி கையையொட்டி கரும்பு சாகுபடி செய்வதில்லை. தஞ்சாவூர், சேலம், போன்ற மாவட்டங்களில் தான் விளைச்சல் அதிகம். சராசரியாக கரும்பு உற்பத்தியானது, ஒரு ஏக்க ருக்கு 6ஆயிரம் கரும்பு வரை சாகுபடி செய்யப்படும். இதில் ஒரேயொரு முறை மட்டுமே விளைச்சல் எடுக்க முடியும். கரும்பு விவசாயத்தின் போது அதனைப் பாதுகாக்க தினசரி எறும் புகள், கரும்பு சோகை உள்ளே செல்லாமல் பார்க்க வேண்டும்.  ஒருசில விவசாயிகள் கரும்புகள் கருப்பு வர்ணம் வருவதற்கு வேண்டி கரும்பின் அடிப்பாகத்தில் மருந்து தெளிப்பான் மூலம் செழிப்படைய வைப்பதாகக் கூறப்படுகிறது. இவற்றை அடையாளம் காணும் வியாபாரிகளில் பெரும்பகுதியினர் அக்கரும்புகளை வாங்குவதில்லை. இந்த கரும்பு வகைகள் மனிதர்கள் சாப்பிட மட்டுமே பயன்படுத்த முடி யும். வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது.  இந்நிலையில், இவ்வாண்டு கரும்பு விற்பனை குறித்து கானூர் பகுதியைச் சேர்ந்த கரும்பு வியா பாரி ஒருவர் கூறுகையில், திருப்பூர் மாவட்ட வியாபாரிகள், ஒரு ஜோடி கரும்பை ரூ.12 ரூபாய் முதல் ரூ.20 வரை விலை வைத்து ஏக்கருக்கு கணக் கீட்டு வாங்குவர். இதைத்தொடர்ந்து கூலி ஆட்களை இறக்கி கரும்பை அறுவடை செய்து, வாகனத் தில் ஏற்றும்போது சராசரியாக ஜோடி கரும்பு 60 ரூபாய் மதிப்பீடு பெறும். இதனை பொதுமக்களிடம் விற்பனை செய்யும்போது ஒரு ஜோடி 100 ரூபாய் முதல் 120 வரை கரும்பு விற் பனை நடைபெறும். சோகை வாடி விட்டாள் ஜோடி கரும்பு ரூ.40 முதல் 70 வரை மட்டுமே விற்பனை செய்ய முடியும்.  மூன்று தலைமுறையாக பொங்கல் திருநாளில் கரும்பு விற்பனை செய்து வருகிறோம். ஆனால் இவ்வாண்டு கரும்பு வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. எதிர் பார்த்த அளவிற்கு வியாபாரம் நடைபெறாததால் பெரிய இழப்பைச் சந்தித்துள்ளோம். இதற்கு காரணம் கடந்த காலங்களில் பொங் கல் நேரங்களில் மட்டுமே விற்ப னைக்கு வந்த கரும்பு, தற்போது ஆயுத பூஜை துவங்கும் நேரத்தில் சந்தைகளுக்கு விற்பனைக்கு வரத் தொடங்கிவிட்டது. பொதுமக்கள் வாரம்தோறும் கரும்புகளை சுவைக் கத் துவங்கிவிட்டனர். இதனால் பொங்கல் நேரங்களில் பொதுமக்கள் மத்தியில் கரும்பின் மீதான நாட்டம் குறைந்து விடுகின்றது. இதன் காரண மாக கரும்பு வியாபாரிகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றோம் என்றார்.   (ந.நி) 

;