tamilnadu

கோவில்வழி பேருந்து நிலையத்தை உடனே சீரமைத்து பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திடுக நாளைய திருப்பூர் மக்கள் அமைப்பு கோரிக்கை

திருப்பூர், ஜூன் 14 -  திருப்பூர் கோவில்வழி மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களை உடனடியாக பயன்பாட்டிற்குக் கொண்டுவரக் கோரி நாளைய திருப்பூர் மக்கள் அமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண் டியன் கூறியுள்ளார். இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியதாவது,  திருப் பூர் பழைய பேருந்து நிலையம்  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடிக்கப்பட்டு வருகி றது.

இச்சூழலில் பேருந்து  நிலையத்தை முன்  கூட்டியே  திட்டமிட்டு  மாற்றாததன் விளைவு பேருந்து நிலைய இடிபாடுகள் மற்றும் பாலத்திற்கு அடியில் தற்காலிக மாக பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. அதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு மட் டுமல்லாமல்  பொதுமக்களின்  உயிருக்கு  பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது. மேலும் தாராபுரம் ரோட்டில் உள்ள கோவில் வழி தற்காலிக பேருந்துநிலையப் பணிகளும் முழுமையடையாமல் உள் ளது.

இவைகள் அனைத்தும் மாநக ராட்சிக்கு தெரிந்தும் மாநகராட்சி நிர்வாகம் இதை ஏன் துரிதப்படுத்தாமல் உள்ளது எனத் தெரியவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு பொதுமக்கள் நலன் கருதி கோவில்வழி பேருந்து நிலை யத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திட வும் மற்றும் மற்ற பகுதிகளில் தேவையான  தற்காலிக பேருந்து நிலையங்களை உடன டியாக மக்களுக்கு சிரமம் இல்லாத இடங்க ளில் திறக்க ஏற்பாடு செய்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமாய்  திருப்பூர் மக்கள் சார்பாக கேட்டுக் கொள்வ தாக சுந்தரபாண்டியன் கூறியுள்ளார்.

;