tamilnadu

img

பல்லடம் அண்ணாநகர் அரசு பள்ளியில் ரூ.3.50 லட்சத்தில் மராமத்து பணி துவக்கம்

 பல்லடம், செப். 26 - பல்லடம் அண்ணாநகர் அரசு பள்ளியில் தனி யார் பங்களிப்புத் தொகை ரூ.3.50 லட்சத்தில் மரா மத்து பணி துவக்கப்பட்டது. பல்லடம் நகராட்சி அண்ணா நகரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1200 சதுரடிக்கு தரை தளம், 8 ஜன்னல், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை, ஒயரிங், வர்ணம் அடித்தல், பால்சீலிங், மின் விசிறி, விளக்கு வசதி உள்ளிட்ட பணிகளும், அதே பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் மேல் மாடியில் 400 சதுரடியில் மேற்கூரையுடன் கூடிய தளம் அமைத்தல் உள்ளிட்ட மராமத்து பணி கள் மொத்தம் ரூ.3.50லட்சம் செலவு ஆகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றை வேர்கள் சிந்தனையாளர் பேரவை நிறுவனத் தலைவரும், திருப்பூர் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளருமான வழக் கறிஞர் பாலமுருகன் தனது சொந்த செலவில் செய்து தர தீர்மானித்தார். தற்போது பள்ளிக்கு காலாண்டு தேர்வு விடுமுறை 10 நாட்கள் விடப்பட்டு இருக்கும் நிலையில் செவ்வாயன்று இப்பணிகள் துவக்கப்பட்டன. இதில் பள்ளி தலைமை ஆசிரியை அகஸ்டி குணசேகரன், பள்ளி கல்வி குழு தலைவர் கந்தசாமி, 15வது வார்டு திமுக துணை செயலாளர் ரங்கநாதன், பல்லடம் கட்டட பொறியாளர் சங்க முன்னாள் தலைவர் ராமமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

;