tamilnadu

img

உடுமலையில் செங்கொடியை சேதப்படுத்திய சமூக விரோதிகள்: கைது செய்ய மார்க்சிஸ்ட் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார்

திருப்பூர், ஆக. 30 – உடுமலைப்பேட்டை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவ லகம் முன்பிருந்த கொடிமரத் தையும், செங்கொடியையும் சேதப்படுத்திய சமூக விரோதிகளை  கைது செய்து கடும் நடவடிக்கை  எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கட்சியி னர் உடுமலை காவல் நிலையத்தை  முற்றுகையிட்டு புகார் அளித்தனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டையில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகம் முன்பு ஆக.29, சனியன்று இரவு சுமார் 11 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்குச் சென்ற மார்க் சிஸ்ட் கட்சியின் உடுமலை நகரச் செயலாளர் கே.தண்டபாணி சமூக  விரோதிகளைத் தடுத்து அப்புறப்ப டுத்த முயன்றபோது அவரைத் தாக்கிவிட்டு அந்த கும்பலைச் சேர்ந்தோர்  தப்பியோடியுள்ளனர். இந்நிலையில் ஞாயிறன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகரச் செய லாளர் கே.தண்டபாணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.சுப்பிரமணியம், எஸ்.ஆர்.மதுசூதனன், உடுமலை ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ் உள்பட  30க்கும் மேற்பட்டோர் உடுமலைப் பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அங்கு காவல் ஆய்வாளரைச் சந்தித்து மேற்படி சம்பவம் குறித்து புகார் மனு அளித்து  குற்றவாளிகளைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தினர். மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் கே.தண்டபாணி அளித்த புகார் மனுவில் கூறியி ருப்பதாவது: தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி உடுமலை தாலுகா பெரிய வாளவாடி கிரா மத்தில் நிலவியல் பாதை ஆக்கிர மிப்பை அகற்ற வலியுறுத்தி விவசா யிகள் குடும்பத்துடன் காத்திருக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வரு கிறது. இச்சூழலில் சனியன்று இரவு  11 மணியளவில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் முன்புள்ள கொடி மரத்தில் இருக்கும் கொடியை ஒரு  கும்பல் சேதப்படுத்துவதாக, அரு கில் இருக்கும் கடைக்காரர் தொலை பேசியில் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக நான் கட்சி அலுவ லகம் சென்று பார்த்தபோது, கட்சி யின் கொடி மரத்தின் முன்பாக மாரியப்பன் கோவில் காவலராகப்   பணிபுரியும் ஒரு நபரும், அவருடன்  இரண்டு நபர்களும் கொடி  மரத்தைப் பிடித்து கொடியை இறக்கிக் கிழித்துக் கொண்டும்,  கொடி மரத்தை ஆட்டிப் பறித்துக்  கொண்டும் இருந்தனர். இவர்க ளைத் தடுக்க முயன்றபோது அவர் கள் என்னை அடித்துக் கீழே தள்ளி விட்டு மாரியம்மன் கோவிலுக் குச் சென்று புகுந்துவிட்டனர். எனவே எங்கள் கட்சியின் கொடிம ரம் மற்றும் கொடியை கிழித்துச் சேதப்படுத்தி என்னைத் தாக்கி  கீழே தள்ளிவிட்டு தப்பியோடியவர் களைப் பிடித்து விசாரித்து உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள் ளது.

;