tamilnadu

அவிநாசி அருகே சாலை விபத்துகளில் 6 பேர் பலி

அவிநாசி, ஜன. 4- திருப்பூர் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடை பெற்ற சாலை விபத்துகளில் ஆறு பேர் உயரிழந்தனர். அவிநாசி அருகே  நம்பியம் பாளையம் பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரு பெண்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரணையில்  உயிரிழந்தவர்கள் ஆதாரம்பாளை யம் பகுதியைச் சேர்ந்த சிவமணி (48) மற்றும் கனகமணி (40) என்று தெரியவந்தது.  அவிநாசி அருகே தெக்கலூரில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பள்ளி மாணவன் உள்பட இருவர் வியா ழக்கிழமை நள்ளிரவில் உயிரி ழந்தனர். திருப்பூர் - தாராபுரம் சாலை தொங்குட்டிபாளையத்தை சேர்ந்தவர் பி.ஜலாவுதீன் (36). இவரது உறவினர் கோவை அர சூரை சேர்ந்த என்.லட்சுமணன் (33), இவரது நண்பர் திருப்பூர் அருள்புரம் அருகே நொச்சிபாளை யம் பிரிவை சேர்ந்த டி.ராஜசீலன் (39). ஆகியோர் காரில் கருமத்தம் பட்டியில் இருந்து திருப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டி ருந்தனர். தெக்கலூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே வந்த போது, எதிரில் கோவை நோக்கி அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து, சாலை  மையப்பகுதியில் உள்ள தடுப்பு பகுதியை தாண்டி, கருமத்தம்பட்டி யில் இருந்து வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில்  லட்சுமணன், ராஜசீலன்,  கார் ஓட்டுனர், கோவை, மேட்டுப் பாளையம் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஏ.ரிஷிவந்த் (20), உடன் வந்த கோவை இடிகரையைச் சேர்ந்த  பள்ளி மாணவர் பி.யாதவ் (16) ஆகியோர் பலத்த காயமடைந்த னர். இவர்கள் மீட்கப்பட்டு கோவை அரசு மற்றும் தனியார்  மருத்துவமனைகளில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி லட்சுமணன், யாதவ் ஆகியோர் உயிரிழந்தனர்.  இதேபோல், அவிநாசி அருகே இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். திருப்பூர், ஓடக்காடு கே.என்.பி புரம் பகுதியைச் சேர்ந்தவர் முக மது யூனிஸ் (43). இவரது மனைவி ராபியா(38). இவர்கள் இருவரும் மேட்டுப்பாளையத்தில் இருந்து  திருப்பூர் நோக்கி இருசக்கர வாக னத்தில் சென்று கொண்டிருந்த னர். அவிநாசி, நரியம்பள்ளி அருகே வரும் போது எதிரே வந்த  மற்றோரு இருசக்கர வாகனம் நேருக்கு, நேர் மோதி விபத்துக் குள்ளானது. இதில் பலத்த காய மடைந்த முகமது யூனிஸ் உயிரி ழந்தார்.                                  முடி திருத்தும் தொழிலாளி பலி
திருப்பூர் அருகே இரு சக்கர  வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் முடி  திருத்தும் தொழிலாளி பலியா னார். மங்கலம், காயிதே மில்லத் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). இவர் வெள்ளியன்று வஞ் சிபாளையத்தில் இருந்து மங்கலம் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மொபட் மீது மோதியதில் ராஜேந்திரன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதைத் தொடர்ந்து தலையில் பலத்த காயமடைந்த ராஜேந்திரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப் பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து அவரைப் பரிசோதித்த மருத்துவர், ராஜேந்திரன் ஏற் கனவே இறந்து விட்டதாகக் கூறினார். இவ்விபத்துகள் குறித்து அவிநாசி மற்றும் திரு முருகன்பூண்டி போலீசார் வழக் குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருப்பூர், 15.வேலம்பாளை யம், புதுக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமசந்திரன் மகன் கிஷோர்(19). இவரது நண்பர் அவிநாசி சாலைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் மகன் சஞ்சய்(19). ஆகிய இரு வரும் மோட்டார் சைக்கிளில் அவி நாசியிலிருந்து புளிம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் சேவூர் அருகே லூர்து புரம் பகுதியில் அதிவேகமாகச் சென்றபோது, நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த கிஷோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சஞ்சய்,  கோவை தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப்  பிரிவில் அனுமதிக்கப்பட்டுள் ளார். இது குறித்து சேவூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

;