tamilnadu

img

மேல்நிலை தொட்டி அருகில் கழிவுநீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

அவிநாசி, ஜன. 4- அவிநாசி அருகே நியூ டவுன் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் விடப்படும் கழிவுநீரால் சுகாதாரக் கேடு விளையும் ஆபத்து உள்ளதால் உடனடியாக கழிவுநீரை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட 3 வது வார்டு  நியூ டவுன் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இங்கு அரசுக்குச் சொந்தமான சுமார்  50 சென்ட் மதிப்பிலான நிலத்தில், பேரூ ராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு மாவட்டத்திலிருந்து இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட 100க்கு மேற்பட்ட மரக்கன் றுகள் நடப்பட்டுள்ளன. பேரூராட்சி நிர்வா கமும் அப்பகுதி பொதுமக்களும் இவற்றுக்கு தண்ணீர் விட்டு பாதுகாத்து வருகின்றனர்.  அத்துடன் அப்பகுதியில் மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டு குடியிருப்பு வாசி களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2017 ஆம் வருடம் அப்பகு தியில் தனிநபர் ஒருவர் எந்தவித அனுமதியும் இன்றி சாக்கடை கால்வாய் அமைக்கப் பட்டு சாக்கடை கழிவு நீர் விடும் முயற்சியில் ஈடுபட்டார். இதனையறிந்த பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக சாக்கடை கால்வாய் கட்டும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டது.  இந்நிலையில், தற்போது மீண்டும் சாக்கடை கால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் கூறுகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சி யாக  பேரூராட்சி அதிகாரிகளை சந்தித்து  அரசு சொந்தமான நிலத்தை மீட்க வேண் டும், கால்வாய் கட்டும் பணியை  தடுத்து நிறுத்த வேண்டும் என பல முறை மனுக்கள் கொடுத்து வந்தோம். இதனால் மூன்று வரு டங்களாக வேலை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கால்வாய் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. உடனடியாக அர சுக்குச் சொந்தமான நிலத்தை மீட்க வேண் டும் எனக் கூறினார். இதுகுறித்து பேரூ ராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது உட னடியாக ஆய்வு மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

;