tamilnadu

img

மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணம் கோரி திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருப்பூர், ஜூன் 10 – கொரோனா ஊரடங்கு முடக்கத்தால் வாழ்விழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணம் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சி யரகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் டி.ஜெயபால், மாவட்டப் பொரு ளாளர் ஆர்.காளியப்பன், துணைச் செயலா ளர் ரமேஷ், துணைத்தலைவர்கள் வர்க்கீஸ், ரோசி, குப்புசாமி ஆகியோர் மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளரிடம் புதனன்று மனு அளித்தனர். இதில், மாதாந்திர உதவித் தொகையை பிரதிமாதம் 5ஆம் தேதிக்குள் வழங்க ஏற் பாடு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் மற்றும் சிறு வியாபா ரம் செய்து வந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு ரூ.10ஆயிரம் மானியத்துடன் ரூ.50 ஆயிரம் கடன் வழங்க வேண்டும்.

டி.கே.ரங்கராஜன் எம்.பி.  தொகுதி மேம் பாட்டு நிதியில் இருந்து திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டத்தைச் சேர்ந்த ரமேஷ், ஏரிப்பாளையம் ஆ.பாபு,  ராஜம்மாள் லே அவுட் குப்புசாமி, பாலசுப்பிரமணி, காந்தி நகர் மணிகண்டன் ஆகிய ஐவருக்கும் இணைப்புச் சக்கரத்துடன் கூடிய பெட் ரோல் ஸ்கூட்டர் வாங்க நிதி ஒதுக்கீடு செய் துள்ளார். உரிய துறைகளில் ஆவணங் கள் பெற்று காலதாமதம் செய்யாமல் அந்த வாகனங்களை வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

;