tamilnadu

img

விதைப்பந்துகள் தூவும் ஸ்கேட்டிங் பயணம்

திருப்பூர், ஜன. 11- ஒரு லட்சம் விதைப்பந்துகள் தூவும் மாணவ, மாணவியரின் ஸ்கேட் டிங் பயணத்தினை கால்நடை பரா மரிப்புத்துறை அமைச்சர் கே.ராதா கிருஷ்ணன் உடுமலையில் தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை மத்திய பேருந்து நிலை யம் அருகில், ஜாக்குவார் ஸ்கேட் டிங் அகாடமி சார்பில் புவி வெப்பமய மாவதலை தடுப்பதை மையப் பொரு ளாகக் கொண்டு 1 லட்சம் விதைப் பந்து தூவும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 51 மாணவர்கள் ஸ்கேட்டிங் பயணம் மூலம் இதனை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். இதில் கால் நடை பராமரிப்புத்தறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களின் உலக சாதனை ஸ்கேட்டிங் பயணத் தினை தொடங்கி வைத்தார்.  ஸ்கேட்டிங் பயணத்தில் மாண வர்கள் விதைப்பந்துகளை எளி தாக கொண்டு செல்ல தனியாக மடி யில் கட்டிச்செல்லும் பை உருவாக் கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உத வும் வகையில் உடுமலை அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த 15 தேசிய மாணவர் படை இளைஞர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், உடுமலை ஆம்புலன்சு சங் கத்தின் சார்பில் 10 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் தேவையான அனைத்து முதலுதவி மருந்துகளுடன் நிகழ்ச்சி முடியும் வரை உடனிருந்து உதவி செய்தனர். 1 லட்சம் விதைகளில் புங்க விதை கள் 60 ஆயிரம், 40 ஆயிரம் வேம்பு விதைகளை உள்ளடக்கியது. இப்பய ணம் மத்திய பேருந்து நிலையத்தில் துவங்கி 9 வது சோதனை சாவடியில் நிறைவடைந்தது.

;