tamilnadu

img

பயனற்று கிடக்கும் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடங்கள்

 கிராமப்புற மக்கள் தங்குதடையின்றி அரசின் பல்வேறு சான்றிதழ்களை மிக எளிதாக பெறும் வகையில் கிராம ஊராட்சிகளில் இ-சேவை மையங்கள் துவங்கப்பட்டன. இதன்படி வருவாய்த்துறை தொடர்பான சான்றிதழ், சமூக  பாதுகாப்பு திட்ட விண்ணப்பம், போட்டித் தேர்வு விண்ணப் பம், பாஸ்போர்ட் பதிவு, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு சேவைகளை கிராமப்புற மக்கள் இ சேவை மையத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் மட்டுமே இருந்த பொது சேவை மையங்கள், கூட்டுறவு சங்கங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதனால் கிராமப்புற மக்கள் சான்றிதழுக்காக காத்திருப்பது தவிர்க்கப்பட்டது. மேலும், இத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கிராம ஊராட்சிகளில், அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஆங்காங்கே கிராம சேவை மைய கட்டடங்கள் கட்டப் பட்டன. இந்த கட்டடத்தில், மகளிர் குழுவினருக்கு முறை யான பயிற்சி வழங்கி, கம்ப்யூட்டர் மற்றும் இணைய தள வசதியைப் பெற்று, பொது சேவை மையங்கள் நிறுவ அரசு திட்டமிட்டது.  இதன்ஒருபகுதியாக, அவிநாசி தாலுகாவில், சேவூர், கருவலூர், வேலாயுதம்பாளையம், முதலிபாளையம் போன்ற இடங்களில் கிராம சேவை மையம் கட்டப் பட்டது. ஆனால், இம்மையங்கள் அனைத்தும் தற்போது திறக்கப்படாமல் உள்ளன. சேவை மையம் செயல்படுவ தற்கு அவசியமாக இணையதள இணைப்புப் பெறுவதில் உள்ள சில நிர்வாக சிக்கல்கள் தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பல கிராம சேவை மைய கட்டடங்கள் இன்று வரை திறப்பு விழா காணப்படாமலேயே முடங் கிக்கிடக்கிறது.  இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்ட போது, கிராம சேவை மைய கட்டடங்களை பராமரிக்கும் பொறுப்பு, அந்தந்த பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் கூட்டங்களை நடத்துவது போன்றவற்றுக்கு கிராம சேவை  மையக் கட்டடங்களை பயன்படுத்தி வருவதாக தெரிவித்த அவர்கள், கட்டிடம் அமைத்ததற்கான முக்கிய நோக்கமான இ சேவைத் திட்டம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிகரமாக அமையவில்லை என்றும் தெரிவித்தனர். இவ்வாறு அரசு நிதி பயனற்று போயுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு பயனற்று கிடக்கும் கிராம சேவை மைய கட்ட டங்களை மாற்று பயன்பாட்டுக்கு அனுமதிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழத் தொடங்கியுள்ளது.  (ந.நி)

;