tamilnadu

ஊராட்சி நிர்வாகத்தில் உறவினர்கள் ஆதிக்கம் மாவட்ட நிர்வாகம் தடுக்குமா!

அவிநாசி, ஜன. 25- அவிநாசி பகுதியில் பெண் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிகளில் கணவர்களின் ஆதிக் கத்தால் ஊராட்சி நிர்வாகம் செயல்படுவதில் சிரமம் ஏற்பட் டுள்ளது.  திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர் தல் நடைபெற்று முடிந்து தலை வர், துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். இதில் பல் வேறு பெண்கள் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்று உள்ளனர். இதைத் தொடர்ந்து பெண் தலைவர்களுடைய கணவர்கள் ஊராட்சி நிர்வாகத்தில் தலையிட்டு ஊராட்சிமன்ற உதவி யாளரை மிரட்டுவது, துப்புரவு ஊழி யர்கள் பணி செய்யும்போது தரக் குறைவாக பேசுவது போன்ற செயல் களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப் படுகிறது.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், உள்ளாட்சித் துறை யில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால் பெண் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுய மாக செயல்பட முடிவதில்லை. இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, உள்ளாட்சி தலை வர்களுக்கு, துணை தலைவர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. அதேநேரம் ஊராட்சி மன்ற பெண் பிரதிநிதிகளின் கணவர்களும் நிர்வாகத்தில் ஆளுமை செலுத்தக் கூடாது என்பதில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் கவனம் செலுத்தி பெண் பிரதிநிதிகளை சுயமாக செயல்பட வைக்கவேண்டும். கணவர்களின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;