tamilnadu

img

யுனிவர்சல் பள்ளியில் மாணவர்களை துள்ள வைத்த கிராமிய தெம்மாங்கு பாடல்கள்

திருப்பூர், ஜன. 28 - யுனிவர்சல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் புதிய மின்னணு தொழில்நுட்பக் கட்டிடத் திறப்பு மற்றும் ஆண்டு விழா நிகழ்வில் செந்தில் கணேஷ் - ராஜலட் சுமி தம்பதியின்  நாட்டுப்புற தெம்மாங்கு பாடல் கூடி யிருந்த மாணவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோரை துள்ளிக் குதித்து நடனமாட வைத்தது. திங்களன்று மாலை சேடபாளையம் யுனிவர்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி மைதானத்தில் இந்த விழா நடைபெற்றது. பள்ளித் தாளாளர் யுனிவர்சல் எஸ்.ராஜகோபால் தலைமை வகித்தார். இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டு புதிய மின்னணு தொழில்நுட்பக் கட்டிடத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்து வாழ்த்திப் பேசினார். இப்பள்ளியில் பேணி பாதுகாக்கப்படும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தை தொடர்ந்து வலுப்படுத்தி சிறப்புடன் நடத்த வேண்டும் என பி.ஆர்.நடராஜன் வாழ்த்தினார். பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன், ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் பாரதி சின்னப்பன், கரைப்புதூர் ஊராட்சிமன்றத் தலை வர் ஜெயந்தி கோவிந்தராஜ், தமிழாசிரியர் வே. கணேஷ்குமார், சுற்றுச்சூழல் ஆர்வலர் கோவை சதா சிவம் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற னர்.  இந்நிகழ்வில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ் அளித்துப் பாராட்டப்பட்டனர். பள்ளி மாணவிகளின் நடன, நாட்டியம், சொற்பொழிவு நடைபெற்றது.  இதைத் தொடர்ந்து திருப்பூர் ஏலேலங்கடி வேலா. இளங்கோ  கலைக்குழுவினருடன் இணைந்து விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலட் சுமி தம்பதியினர் நாட்டுப்புற தெம்மாங்கு பாடல்கள் பாடி மகிழ்வித்தனர். இதில் பள்ளி மாணவ, மாணவி கள், பெற்றோர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் கரவொலி எழுப்பி ரசித்தனர். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுடன், பெற்றோர்கள் உள் பட பெருந்திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.

;