tamilnadu

img

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு- திருப்பூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம்

பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் திருப்பூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் உள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் 1ம் தேதிதொடங்கி 19ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சுமார் 9 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய தேர்வின் முடிவுகள் இன்று காலை 9.30மணியளவில் வெளியானது.  

பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளும், பிளஸ்-1 மார்ச், ஜூன் பருவ தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019-ல் எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. 


மொத்த தேர்ச்சி விகிதம்- 91.03 சதவீதம்

மாணவிகள் தேர்ச்சி : 93.64 சதவீதம்

மாணவர்கள் தேர்ச்சி: 88.57 சதவீதம்


மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி


*திருப்பூர் முதலிடம்: 95.37 சதவீதம்

*ஈரோடு 2-வது இடம் (95.23 சதவீதம்)

*பெரம்பலூர் 3-வது இடம் 95.15 சதவீதம்


*மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி 5.07 சதவீதம் அதிகம். அறிவியல் பாடங்களுக்கு இணையாக வணிகப்பாடப்பிரிவுகளிலும் மாணவ, மாணவியர் அதிகஅளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தேர்வர்கள் www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம்.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், ஜூன் மாதம் நடைபெறும் சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி குறித்து விரைவில் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை கூறியுள்ளது.


கடந்த ஆண்டுகளைப் போல இல்லாமல், இந்த ஆண்டு 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது குறிப்பிடத்தக்கது. 

;