tamilnadu

பிளஸ் 1 பொதுத்தேர்வு: திருப்பூர் மாவட்டம் 97.41 சதவிகிதம் தேர்ச்சி

திருப்பூர், ஜூலை 31- தமிழகத்தில் 2020ஆம் ஆண்டு பிளஸ் 1 அரசுப் பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டம் 97.41 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 2020 மார்ச் மாதம் பிளஸ் 1 அரசுப் பொதுத் தேர்வு நடை பெற்றது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 25 ஆயி ரத்து 622 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். இதில், 24 ஆயிரத்து 958 பேர் தேர்ச்சி பெற்றதையடுத்து,

மாநில அள வில் திருப்பூர் மாவட்டம் ஐந்தாம் இடம் பெற்றுள்ளது. தேர்வெழுதிய மொத்த மாணவர்கள் 11ஆயிரத்து 615 பேரில், 11ஆயிரத்து 208 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர் தேர்ச்சி விகிதம் 96.50 சதவிகிதம் ஆகும். அதேசமயம் மொத்தம் 14ஆயிரத்து 7 மாணவிகள் பங்கேற்றதில் 13ஆயி ரத்து 750 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 98.17 சதவிகிதம் ஆகும். முந்தைய 2018, 2019 கல்வியாண்டுகளில் பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவு களில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றிருந்தது.

ஆனால், இம்முறை ஐந்தாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 214 பள்ளிகளில் இத் தேர்வு நடைபெற்ற நிலையில், அரசுப் பள்ளிகள் 6, அரசு உதவி பெறும் பள்ளிகள் 2, சுயநிதிப் பள்ளிகள் 6 மற்றும் மெட்ரிக் பள்ளிகள் 89 என மொத்தம் 103 பள்ளிகள் நூறு சத விகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

;