tamilnadu

img

வங்கிகளை இணைக்கும் முடிவுக்கு ஆட்சேபம் கருப்புப் பட்டை அணிந்து பணி செய்த வங்கி ஊழியர்கள்

திருப்பூர், ஆக. 31 – மத்திய அரசு வங்கிகளை இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்டத் தில் உள்ள வங்கிகளில் பணி யாற்றும் 5 ஆயிரத்து 500 ஊழி யர்கள் கருப்புப் பட்டை அணிந்து சனியன்று வேலை செய்தனர். வங்கிகளை ஒன்றிணைப்பது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து நாடு தழுவிய அளவில் அனைத்து வங்கி ஊழியர்க ளும் கறுப்பு பட்டை அணிந்து  தங்களது எதிர்ப்பை வெளிப்ப டுத்துவது என்று தீர்மானிக்கப் பட்டது.அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் வங்கியின் அனைத்து நிலை ஊழியர்களும் கருப்பு பட்டை அணிந்து சனி யன்று வங்கிகளில் பணியில் ஈடுபட்டனர். மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்யாவிட்டால் நாடு தழுவிய அளவில் காலவரை யற்ற வேலை நிறுத்தம் மேற் கொள்ளப்படும் எனவும் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தெரி வித்தனர். மாலையில் ஊத்துக்குளி சாலை ஸ்டேட் வங்கிக் கிளை முன்பாக மத்திய அரசின் முடிவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் பங்கேற்ற ஊழி யர்கள் அரசின் முடிவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

;