tamilnadu

வாடகை கார் ஓட்டுநர் மீது கொலைவெறி தாக்குதல் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் ஓட்டுநர்கள் புகார்

திருப்பூர், ஜன. 20 – திருப்பூரில் வாடகை கார் ஓட்டு நர் மீது சொந்த காரை வாடகைக்கு இயக்கியவர் கும்பலாகக் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதாகக்கூறி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்தி கேயனிடம் புகார் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்களன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் பங்கேற்று கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
வாடகை கார் ஓட்டுநர் மீது தாக்குதல்
திருப்பூர்- குறுவம்பாளையம் ரோடு, வி.வி.ஐ.பி.கார்டனைச் சேர்ந்த சரவணகுமார் உள்ளிட்ட வாடகை கார் ஓட்டுநர்கள் ஐம்ப துக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,  சொந்த உபயோக வாகனத்தை கருப் புசாமி என்பவர் வாடகைக்கு இயக் கினார். இது குறித்து வாடகைக் கார் ஓட்டுநர் டி.சக்திவேல் ஏன் இப்படி செய்கிறீர்கள் எனக் கேட்ட தற்கு, கருப்புசாமி ஆட்களைச் சேர்த்துக் கொண்டு சக்திவேலை கடுமையாகத் தாக்கியதுடன், காரை ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் சக்திவேலின் கால் முறிந்துவிட்டது. எனவே தாக்கு தல் நடத்திய சொந்த வாகன உரிமை யாளர் கருப்புசாமி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட சக்திவேலுக்கு நிவா ரணம் பெற்றுத் தரவும், சொந்த வாக னங்களை வாடகைக்கு இயக்குவ தைத் தடுத்து நிறுத்தவும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தினர்.
வீடு ஏலம் எடுத்ததில் வங்கி மோசடி
திருப்பூர் பாளையக்காடு பகுதி யைச் சேர்ந்த, விரைவுப் போக்கு வரத்துக் கழகத்தில் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்.நட ராஜன். இவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி உடுமலைபேட்டை கிளை அடமான வீடுகளை கடந்த நவம்பர் 27 ஆம் தேதி ஏலம் விட்டது. ஏலத்தில் பங்கேற்ற நடராஜன் ரூ.52 லட்சத்து 20 ஆயிரத்துக்கு ஒரு வீ்ட்டை ஏலம் எடுத்து, முன்பணம் ரூ.15 லட்சத்து 23 ஆயிரத்து 610 செலுத்தி ஆவணங்களை பெற்றிருக்கிறார். நேரில் சென்று வீட்டைப் பார்த்த போது வீட்டு ஆவணங்களில் குறிப் பிட்ட அளவு இடம் அங்கு இல்லை. 4305 சதுரடி பரப்பளவிற்கு பதிலாக 2975 சதுர அடிதான் இருந்தது. ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள அளவுக்கு மாறாக குறைவான அளவு இடம் இருக்கும் நிலையில் பிற வங்கிகள் கடன் தர மறுக்கின் றனர். மெர்கண்டைல் வங்கி அதிகாரி களுக்குத் தெரிந்தே நில அளவில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்நி லையில் ஏலத்தில் வீடு வாங்க, முன் பணமாக கொடுத்த ரூ.15 லட்சத்து 23 ஆயிரத்து 610-ஐ திரும்பச் செலுத்த வும், இழப்பீடு வழங்கவும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடராஜன் கேட்டுக் கொண்டார்.
போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு
அவிநாசி தாலுகா, தெக்கலூர் கிரா மம், சூரிபாளையத்தைச் சேர்ந்த எஸ்.சென்னியப்பன் (50) விசைத்தறி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் தனக்கு உடமை யான ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிப் பதைத் தடுத்து நிறுத்தி, அந்நிலத்தை பறிமுதல் செய்து தர வேண்டும் என ஆட்சியரிடம் அளித்த மனுவில் கேட் டுக் கொண்டார். சூரிபாளையத்தில் தனக்குச் சொந் தமான மானாவரி நிலம் உள்ளது. இதில் போலி ஆவணம், போலி பட்டா தயார் செய்தும், ஆள் மாறாட்டம் செய் தும் தனது நிலத்தை அபகரிக்கச் சிலர் முயற்சி மேற்கொண்டிருப்பதாக சென் னியப்பன் புகார் கூறியுள்ளார். இதனையடுத்து பதிவுத்துறை துணைத் தலைவர் விசாரணை செய்து  ஆவவணங்கள் போலியானவை என உறுதிப்படுத்தி இறுதியாணை வழங்கி னார். இதன்படி போலி ஆவணங் களை அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் அரசு அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்கவில்லை. எனவே ஆட்சி யர் தலையீடு செய்து போலி ஆவணங் களை அப்புறப்படுத்த வேண்டும், மோசடி செய்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், இழப் பீடு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
பேருந்தை தொடர்ந்து இயக்க வலியுறுத்தல்
தாராபுரம் பகுதியில் 10 ஏ புறநகர் பேருந்தை விட்டுவிட்டு இயக்குவதை தொடர்ச்சியாக இயக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும்படி சங்கரன் டாம்பாளையம், வெள்ளைக்கவுண் டன் புதூர் ஊர்ப்பொது மக்கள் சார்பாக வி.பி.பெரியசாமி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இதில், எரசனம்பாளையம், வெள் ளைக்கவுண்டன் புதூர், அமராவதிக் கவுண்டன் புதூர், நல்ல குமாரகவுண் டன் புதூர், கருங்கல்பாளையம், ஜெ.ஜெ.நகர் மற்றும் அருகாமையில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் 10ஏ பேருந்து ஒன்றுதான் இயக்கப்படுகி றது. வேறு பேருந்து வசதி இல்லை. ஆனால் 32 ஆண்டு காலமாக இயக்கப் படும் 10 ஏ பேருந்தை தொடர்ச்சியாக இயக்காமல் அவ்வப்போது விட்டு விட்டு இயக்கப்படுவதால் கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக அரசுப் போக்கு வரத்து தாராபுரம் கிளை அலுவலக அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை. ஆட்சியருக்கு மனு அளித் தால்கூட இரு நாட்கள் மட்டும் இப் பேருந்தை இயக்கிவிட்டு மீண்டும் நிறுத்திவிடுவர். தனியார் பேருந்து உரிமையாளர் களிடம் கையூட்டுப் பெற்றுக் கொண்டு அரசுப் பேருந்து இயக்கத்தை நிறுத்து கின்றனர். எனவே இதைத் தடுத்து அரசு பேருந்தை தொடர்ச்சியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
குளத்தை தூர்வார கோரிக்கை
குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், வடுகபாளையம் கிராமம், லிங்கமநா யக்கன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஊர்ப் பொது மக்கள் சார்பாக சி.கிரி என்பவர் ஆட்சியரிடம் அளித்த மனு வில், லிங்கமநாயக்கன் புதூரில் சுமார் மூன்றரை ஹெக்டேர் பரப்பள வில் குளம் உள்ளது. இந்த குளத்தை ஆழப்படுத்தி தூர்வாரி கரையை மேம் படுத்தினால் சுற்றுவட்டார விவசாய கிணறுகள், ஆழ்குழாய்களுக்கு நீர் வரத்து அதிகரிக்கும். எனவே மாவட்ட ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் மேற்படி குளத்தைத் தூர்வாரி கரையை பலப்படுத்த நிதி ஒதுக்கு மாறு விவசாயிகள் சார்பாக கேட்டுக் கொள்வதாக கூறப்பட்டிருந்தது.
கால்நடை சந்தை
காளிநாதம்பாளையம் வழக்கறி ஞர் மு.ஈசன், நடுவேலம்பாளையம் வழக்கறிஞர் ப.மகேஷ்குமார் ஆகி யோர் திங்களன்று மாவட்ட ஆட்சிய ரிடம் அளித்த மனுவில், திருப்பூர் தெற்கு உழவர் சந்தை அருகே வாரந் தோறும் திங்கள்கிழமை இயக்கப் படும் கால்நடைச் சந்தையை அனைத்து வசதிகளுடன் கூடியதாக வேறு இடத் திற்கு மாற்றிட வேண்டும் எனக் கேட் டுக் கொண்டனர்.  குறிப்பாக சுமார் 800க்கும் மேற் பட்ட வாகனங்களில் உழவர்கள், வியா பாரிகள் கால்நடை விற்பனைக்கு வரு கின்றனர். ஏழு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்த பின்பே சந்தைக் குள் நுழைய முடிகிறது. கால்நடை களுக்கு உரிய தண்ணீர் வசதி இல்லை. அந்த இடம் சுத்தமாகவும் இல்லை. கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற் படுகிறது. எனவே நகருக்கு வெளியே கிராமப்புறமாக உள்ள பகுதியில், வாகன வசதி, கால்நடைகள், வியா பாரிகள், உழவர்கள் வசதிக்கு ஏற்ப புதிய இடத்தைத் தேர்ந்தெடுத்து கால்நடை சந்தை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து முதல் வாரமாக இருந்ததால் திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சி யரக குறை தீர்க் கூட்டத்துக்கு பொது மக்கள் வருகை குறைவாகவே இருந் தது.

;