tamilnadu

குடிநீர் வசதி கேட்டு மலைவாழ் மக்கள் மனு

உடுமலை, பிப். 1- உடுமலையில் வசித்து வரும் மலைவாழ் மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக் கப்பட்டது இதுதொடர்பாக, தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் நிர்வாகி கோ.செல் வன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 50 ஆயி ரம் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி எங்களது கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 10 ஆண்டுகளாக ஜனநாயக பூர்வ மான போராட்டங்களை நடத்தி வருகி றோம். இந்நிலையில் கடந்த ஆண்டு அன்றைய வேளாண்மை உதவி இயக்கு னர், மாவட்ட இணை இயக்குனர் ஆகி யோர் நேரில் வந்து ஆய்வு செய்து சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் படி குடிநீர் குழாய்கள் அமைத்து தர அரசுக்கு பரிந் துரை செய்தனர்.  தமிழக அரசும் பரிந்துரையை ஏற்றுக் கொண்டு “சிறப்பு பகுதி மேம்பாட்டு திட் டத்தில்” உடுமலைப்பேட்டை மலைவாழ் மக்கள் வாழும் பகுதிக்கு குடிநீர் குழாய்கள் அமைத்து தர ரூ.30 லட்சம் அரசு ஒதுக் கீடு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் நிதியானது மாவட்டத்திற்கு வந்து ஐந்து மாதங்களாகிவிட்டது. ஆனால் பணிகள்  செயல்படுத்தப்படாமல் உள்ளது. எங்கள் மலைப்பகுதி ஊராட்சி அமைப்பின் கீழ் இல்லை. மலைவாழ் மக்கள் வன உரிமை  கிராம சபைகள் உள்ளது. ஆனால் தொடர்ச் சியாக வனத்துறையினர் புலிகள் சரணா லயம் என்று, வன உரிமை சட்டப்படி எந்த பணிகளும் செய்யவிடாமல் தடுத்து வரு கின்றனர்.  ஆகவே தாங்கள் தலையிட்டு மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் எங்களுக்கு குடி நீர் குழாய்கள் அமைத்திட ஒதுக்கப்பட்ட நிதியை எங்களது வன உரிமை குழுக்கள் மூலம் நிறைவேற்றிடவும், குடிநீர் கிடைத் திட உரிய நடவடிக்கை எடுக்குமாறு எங்க ளது சங்கத்தின் சார்பிலும் மலைவாழ் மக் கள் சார்பிலும் கேட்டுக்கொள்வதாக அம் மனுவில் கூறப்பட்டுள்ளது.

;