tamilnadu

img

சட்ட உரிமைகளை தட்டிப்பறிக்கும் மத்திய அரசைக் கண்டித்து சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப். 6- அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்ட மைப்பாகத் திகழும் மதச்சார் பின்மை, சமூக நீதி, தனிநபர்  உரிமைகளைத் தட்டிப் பறித்து சிறுபான்மை மக்க ளைக் குறி வைத்துத் தாக்கும் மத்திய பாஜக அரசைக் கண் டித்து தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு திருப்பூரில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சிறைகளில் விசாரணை இன்றி 10 ஆண்டுகளுக்கு மேலாக வாடிக் கொண்டி ருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை உட னடியாக விடுதலை செய்ய வேண்டும்.

குடியு ரிமைப் பறிப்புச் சட்டத் திருத்தத்தை எதிர்த் துப் போராடியவர்கள் மீது தொடுக்கப் பட்ட பொய் வழக்குகளைக் கைவிட வேண் டும். கைது செய்யப்பட்டு சிறையில் அடைப் பட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி திருப்பூர் குமரன் சிலை முன்பு சனியன்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் திருப்பூர் மாவட்டத் தலைவர் முகமது ஜாபர் தலைமை வகித் தார்.

இதில், மாவட்டச் செயலாளர் வை.ஆனந்தன், மாநிலக்குழு உறுப்பினர் ஷகிலா, மாவட்டத் துணைச் செயலாளர் கலி லூர் ரஹ்மான், அகில இந்திய வழக்கறிஞர் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் எஸ். பொன்ராம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

;