tamilnadu

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை உடனடியாக ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிடுக சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர், மே 9- புலம் பெயர்ந்த தொழிலாளர் களை உடனடியாக ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்ட செயற்கு ழுக் கூட்டம் ஜி.சாவித்திரி தலைமை யில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன் உள்பட  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர். இக்கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னம் வருமாறு: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்ப ரயில்  விடப்படும் என மத்திய உள்துறை  கடந்த மார்ச் 29ஆம் தேதி அறி வித்தது. பயணச் செலவில் 85 சதவிகிதத்தை ரயில்வேயும், 15 சதவிகிதத்தை மாநில அரசும் ஏற்கும் என அறிவிக் கப்பட்டாலும் இதுவரை அதற்கு ரிய சட்டப்பூர்வ ஆணையை மத்திய  அரசு பிறப்பித்து நிதி ஒதுக்க வில்லை.

இதன்மூலம் மத்திய அரசு  நயவஞ்சகமாக நடந்து கொள்வது உறுதியாகிறது. கடந்த 45 நாட்க ளாக தொழிலாளர்கள் வேலை யின்றி, வருமானம் இல்லாத நிலை யில் ரயில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொல்வது மத்திய  அரசின் மனிதாபிமானமற்ற போக் கையே காட்டுகிறது. எனவே, மத்திய அரசு தனது ஏமாற்றும் நடவடிக்கையைக் கைவிட்டு புலம் பெயர்ந்த தொழிலா ளர்களை சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்ப உடனடியாக ரயில் விடுவதுடன், அதற்கான நிதியை முழுமையாக ஒதுக்க வேண்டும் என  வலியுறுத்திக் கேட்டுக் கொள்கி றோம். மேலும், சொந்த ஊர்களுக் குச் செல்லக்கூடிய தொழிலாளர் களை அந்தந்த மாநில அரசுகள் அரவணைத்து சட்டப்பூர்வ உரிமை களைப் பாதுகாத்திட வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு ரயிலில் புறப்பட்டுச் செல்லும் வரை இங்கே  தங்கி இருக்கக்கூடிய நிலையில் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங் களும், மாவட்ட நிர்வாகமும் அவர்க ளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகை யில், உணவு உள்ளிட்ட அத்தியாவ சியத் தேவைகளை நிறைவேற்ற வும், உரிய நி்வாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 சமீப நாட்களாக அவர்களை காவல் துறையினர் ஆங்காங்கே விரட்டியடிக்கும் சம்பவங்களால், அந்த தொழிலாளர்கள் அச்ச உணர் வுக்கு ஆட்பட்டுள்ளனர். காவல் துறை மூலம் விரட்டியடிக்கும் நடவ டிக்கை கண்டிக்கத்தக்கது. அது போன்ற நடவடிக்கைகளை உடன டியாக நிறுத்த வேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும். ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டதாக சில தொழிலாளர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளது. இப்போதைய சூழலுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்பதால் அப்பாவித் தொழிலாளர்கள் மீது அடக்குமுறை ஏவுவது அநீதியானதாகும். தொழிலாளர்கள் மீதான வழக்கு களைக் கைவிட்டு அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.

;