tamilnadu

மைக்ரோ பைனான்ஸ் கடன் பெற்று மோசடி கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

திருப்பூர், ஜன. 28 - திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் வள்ளைக்கவுண்டன் வலசு கிராம மக்களின் பெயரில் மைக்ரோ பைனான்ஸ் கடன் பெற்றுக் கொண்டு குழுத் தலைவர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மோசடி செய்வதாகப் புகார் அளிக்கப்பட் டது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் வாரந்திர மக்கள் குறைதீர் கூட்டம் திங்களன்று ஆட் சியர் விஜயகார்த்திகேயன் தலை மையில் நடைபெற்றது. இதில் வெள்ளைக்கவுண்டன்வலசு பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில், தாராபுரம் வட்டம், பெருமாநல் லூர் கிராமம், வெள்ளைக்கவுண் டன் வலசு, கருப்பாயிவலசு ஆதிதி ராவிடர் காலனியில் வசிக்கும் மக்க ளிடம், குழுத் தலைவி ராமாத்தாள் கணவர் பெயர் குப்புசாமி மற் றும் கூட்டாளி இளங்கோ என்கிற நபர் ஆதார் கார்டு உள்ளிட்ட பல்வேறு அடையாள அட்டை நகலை பெற்றுக் கொண்டு தாராபு ரத்தில் இயங்கிவரும் ஈசாப், உஜ்ஜி வின், ஆசிர்வாத்,கிராம சக்தி சிறு நிதி நிறுவனங்களில் எங்களுக்கு கடன் பெற்றுத் தருவதாகக் கூறி னர்.  ஆனால் ஏமாற்றி கையெழுத்து பெற்றுக் கொண்டு எங்கள் பெயர் களில் பலலட்சம் பணம் எடுத்து மோசடி செய்து விட்டனர். அந்த பணத்தை குழுத் தலைவி ராமாத் தாள் மற்றும் கூட்டாளியான இளங்கோ கடந்த டிசம்பர் மாதம் வரை எங்கள் பெயரிலேயே கடன் செலுத்தி உள்ளனர். தற்போது, 20 20 ஜனவரி முதல் பணம் செலுத்தா மல் தலைமறைவாக உள்ளனர். எனவே இது சம்பந்தமாக அவர் களை கண்டுபிடித்து விசாரணை செய்து எல்லா நிதி நிறுவனங்க ளுக்கும் அவர்களைப் பணம் செலுத்த உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

செல்போன் கோரிக்கை
பொங்கலூர் ஒன்றியம் அலகு மலை ஊராட்சிமன்றத் தலைவர் தூயமணி கூறியதாவது: நான் அலகுமலை ஊராட்சி தலைவராக கடந்த 6ஆம் தேதி அன்று பதவியை ஏற்றுக் கொண்டேன். ஊராட்சியின் நிர்வாக பொறுப்புகள் கடந்த 25 ஆம் தேதியன்று வட்டார வளர்ச்சி அதிகாரியால் என்னிடம் ஒப்ப டைக்கப்பட்டது. தற்போது ஊராட் சியின் பணம் பரிவர்த்தனை செய்வ தற்கு புதிய செல்போன் வேண் டும் என்று கூறினார்கள். காரணம் என்னிடம் சுமார் 13 ஆண்டுக ளுக்கு முன்பு வாங்கிய போன் தான் உள்ளது. இதன் மூலம் பணப்பரி வர்த்தனைக்கு உதவாது என்று கூறி னார்கள். ஆனால் என்னிடத்தில் பணம் மற்றும் மனம் இல்லை. ஆகை யால், அரசு நிதியில் வாங்குவதற்கு உரிய அனுமதி தர ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண் டார். குன்னத்தூர் அடுத்த காவுதம்பா ளையம் ஊராட்சிக்குட்பட்ட சுக்காக் கவுண்டன்புதூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகின் றனர். இப்பகுதியில் போதிய வசதி கள் இல்லாததால், தங்களின் தேவை களுக்கு குன்னத்தூர் மற்றும் பெருந்துறை பகுதிகளுக்கு செல்ல வேண்டியது உள்ளது. எனவே, தங்களின் வசதிக்காக இத்தகைய ஊர்களுக்கு செல்ல பேருந்து வசதி இல்லாமல் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து கிராம சபைகளில் பலமுறை தீர்மானம் நிறைவேற்ற பட்டது. இதுவரை பேருந்து வசதி செய்து தரப்படவில்லை. எனவே,  இப்பகுதிக்கு தினசரி 6 முறை அதா வது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பெருந்துறை - குன்னத்தூர் வரை செல்ல இவ்வழியே பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். திருப்பூர், காளம்பாளையத்தில் சுமார் ஐயாயிரம் மக்கள் வசித்து வரு கின்றனர். இப்பகுதியில் பெரும்பா லானோர் கால்நடை வளர்ப்பில் ஈடு பட்டு வருகின்றனர். ஆனால், இப்ப குதியில் கால்நடை மருத்துவமனை இல்லாததால் கால்நடை மற்றும் பொதுமக்களுக்கு கடும் சிரமம் ஏற்படுகின்றது. எனவே, கால்நடை மருத்துவமனை அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி விவசா யிகள் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டமாகும். ரியல் எஸ் டேட் எஸ்போர்டு மற்றும் வெளி நாட்டினர் முதலீடு செய்யவும், செல் லவும் அதிகப்படியான முத்திரைத் தாள் தேவைப்படுகிறது. மேலும் இதன் மூலம் அரசுக்கு வருவாய் வரு கிறது. திருப்பூரில், பத்திரம் கிடைக்க வில்லை. இது சம்பந்தமாக பிற மாவட்ட முத்திரைத்தாள் வாங்கி உபயோகிக்கின்றனர்.இவை பெரும்பாலும் போலி முகவரியைக் கொண்டுள்ளன. உண்மை தன்மை உள்ளனவா என்றால் போலிகள் ஸ்டாம்ப் என்றே கூறலாம். திருப்பூர் மாவட்ட கருவூல அதிகாரியின் அலட்சியமே இதற்குக் காரணம். அவர் சரிவர அலுவகத்திற்கு வரு வது கிடையாது. இதுகுறித்து கேட் டால் கேம்ப் என்றும் மற்றும் சக நண் பர்கள் அலுவலகத்தில் புகார் கொடுக்கச் சென்றால் அவரின் நேர் முக உதவியாளர் மற்றும் ஊழியர் கள் அலட்சியமாக பேசுகின்றனர். மேலும் சிண்டிகேட் அமைத்து இந்த தட்டுப்பாட்டை உருவாக்குகிறார் கள். எங்கள் பிரதிநிதிகள் கொடுக் கும் புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பதில்லை. தேவையைப் புரிந்து மாவட்ட கருவூல அதிகாரி பத்திரத்தை அரசிடமிருந்து பெற் றுத் தரவில்லை. எவ்வளவு ஸ்டாம்ப் தேவை என அவருக்குத் தெரியவே இல்லை. இதனால் எங்கள் தொழில் பாதிக்கிறது. அரசுக்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்துகி றார். திருப்பூரில் தட்டுப்பாட்டை உருவாக்கி விற்பனை செய்ய மாவட்ட கருவூல அதிகாரி துணை போகிறார். எனவே இது குறித்து முழுமையான விசாரணை செய்து மாவட்ட கருவூல அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்திரைத்தாள் விற்பனையா ளர்கள் கேட்டுக் கொண்டனர். குடிமங்கலம் அடுத்த வடுகபா ளையம் ஊராட்சி, லிங்கமநாயக் கன்புதூர் கிராமத்தில் உள்ள குளத்தை ஆழப்படுத்தி தூர்வாரி, கரையை மேம்படுத்தி குளத்தில் நீரை நிரப்பினால் அருகில் உள்ள பல்வேறு விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். மேலும், பொதுமக்களுக்கு போடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் கிராம ஊராட்சி பொது கிணறுகள் நீர்வரத்து அதிகரிக்கப்பட்டு, கிராம மக்களின் குடிநீர் பிரச்சனையை முற்றிலும் தீர்க்கப்படும். ஆகவே, உடனடியாக குளத்தை தூர் வார வேண்டும் என அப்பகுதி மக்கள் அளித்த மனுவில் கேட்டுக்கொண் டுள்ளனர்.

;