tamilnadu

ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூர், செப். 11- திருப்பூர் மாநகரில் போக்கு வரத்து வசதி இல்லாத பகுதியில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் அவசர அவசரமாகக் கட்டப்பட்டு, முறையான வெளிழு படையான அறிவிப்பு இல்லாமல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு துறைரீதி யான விசாரணை நடத்தி, பத்தி ரப் பதிவு அலுவலகத்தை இடமாற் றம் செய்ய வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் வியாழனன்று விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: திருப் பூர் மாநகரில் வெவ்வேறு பகுதிக ளில் இயங்கி வந்த இணை 1, இணை 2 மற்றும் தொட்டிபாளை யம் ஆகிய மூன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் மற்றும் மாவட் டப் பத்திரப் பதிவாளர் அலுவல கம் ஆகியவை நகரில் வடகிழக்குப் பகுதியில் போக்குவரத்து வசதி இல்லாத நெருப்பெரிச்சல் கிராமம் தோட்டத்துப்பாளையம் ஜி.என்.கார்டனுக்கு மாற்றப்பட்டுள்ளது.  

இதற்குரிய கட்டிட வேலைகள் ஆரம்பிக்கும்பொழுதே பல்வேறு தரப்பினரும் ஆட்சேபம் தெரிவித்த னர். அதையெல்லாம் புறக்கணித் துவிட்டு வெளிப்படைத்தன்மை இல்லாமல் அவசர, அவசரமாக இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான கட்டிட அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதும் தெரி யவில்லை. ஆளும்கட்சி செல்வாக்குள்ள ஒரு குறிப்பிட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர் 30 சென்ட் இடத் தைத் தானமாகக் கொடுத்துள் ளார். அதைச் சுற்றிலும் தனது இடத்தில் 60 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டி வாட கைக்கு விட்டு வருமானம் ஈட்டும் நோக்கத்தில் இந்த இடத்தைக் கொடுத்திருக்கிறார். இதற்கு பதி வுத்துறை அதிகாரிகளும் உடந் தையாகச் செயல்பட்டுள்ளனர். அரசுத் துறை சார்ந்து, மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த கட்டிடம் கட்டும்போது பொது மக்களுக்குரிய அடிப்படை வசதி கள், குறிப்பாக போக்குவரத்து, தங்கும் இடம், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளுடன் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் இந்த அடிப்படை தேவைகளைப் பற்றி கவலைப்படாமல் சிலரது சுயநல நோக்கத்தில் இந்த அலுவலகக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அது வும் கொரோனா பொது முடக்கக் காலத்தில் எவ்வித வெளிப்படை யான அறிவிப்பும் செய்யாமல் ரகசியமாகவும், அவசரமாகவும் இந்த அலுவலகத்தை செயல்பாட் டுக்குக் கொண்டு வந்துள்ளனர். இந்த அலுவலகத்துக்கு திருப் பூர் சுற்று வட்டாரத்தில் சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் கண்டி யன்கோயில் தொங்கிட்டிபாளை யம், காங்கேயம் ரோடு நாச்சிபா ளையம், முத்தனம்பாளையம், மங்கலம், இடுவாய் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பத்திரப் பதிவு சார்ந்த பணிகளுக்கு பொது மக்கள் வர வேண்டியுள்ளது. ஆனால் எந்தப் பகுதியில் இருந் தும் இந்த இடத்திற்கு வருவதற்கு நேரடி பேருந்து வசதி இல்லை. குறைந்தபட்சம் இரண்டு, மூன்று பேருந்துகள் மாறியும், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட பிற வாகனங் களிலும்தான் இந்த இடத்துக்கு வந்து சேர முடியும். அத்துடன் பாதுகாப்பு இல் லாத இப்பகுதியில் கிரயம், பதி வுக்கு வரக்கூடியவர்கள் பணத் தைக் கொண்டு வருவதும் அச்சம் மிகுந்ததாக உள்ளது.

இந்த பகுதி யில் வங்கி, ஏடிஎம் வசதிகளும் இல்லை. புதிய அலுவலகத்தில் ஆவணங்களைப் பாதுகாக்கும் ஆவணக்காப்பு அறையும் இல்லை. ஆக எந்த வகையிலும் மக் களுக்கு பாதுகாப்பும், வசதியும் இல்லாத இடத்தில் இந்த பத்திரப் பதிவு அலுவலகம் திறந்து செயல் பாட்டுக்குக் கொண்டு வந்திருப் பது பற்றி தமிழக அரசு உரிய விசா ரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் நெருப்பெரிச்சல் சார்ந்த பகுதிகளுக்கு உரிய பத்திரப் பதிவாளர் அலுவல கத்தை மட்டும் அங்கே செயல்படு மாறு செய்வதுடன், வயது முதிர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் மாற் றுத்திறனாளிகளுக்கு உரிய வசதி களையும் உள்ளடக்கி, தேவை யான அடிப்படை வசதிகளை அங்கு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.  இது தவிர மாவட்ட மற்றும் பிற பகுதிகளுக்கான பத்திரப் பதிவு அலுவலகங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலகத்தை திருப்பூர் நகரின் மையப் பகுதியில் மக்களுக்குப் பாதுகாப்பும், வசதியும் உள்ள இடத்திற்கு மாற்றிடவும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்டக்குழு வலி யுறுத்திக் கேட்டுக் கொண்டுள் ளது.

;