tamilnadu

img

12 நாட்களுக்கு ஒருமுறை குறைவான குடிநீர் விநியோகம் மண்டல அலுவலகத்தில் முறையீடு

திருப்பூர், ஆக. 6 - திருப்பூர் மாநகராட்சி முதல் வார்டுக்கு உட்பட்ட  திலகர் நகரில் 12 நாட்களுக்கு ஒரு முறை குறைவான அழுத்தத்தில் மிகக் குறைந்த அளவு குடிநீரே விநி யோகம் செய்யப்படுவதை சீர் செய்ய வலியுறுத்தி அப் பகுதி பெண்கள் மண்டல அலுவலகத்தில் முறை யிட்டனர். திலகர்நகர் பகுதியில் 12 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் குடிநீர் கிடைப்பது பற்றி மாநகராட்சி குழாய் ஆய்வாளரிடம் பெண்கள் பல முறை புகார் கூறியுள்ள னர்.

ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி பெண் கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் வியாழ னன்று வேலம்பாளையம் முதல் மண்டல அலுவல கத்தை முற்றுகையிட்டனர்.  இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம் தலைமை யில் பெண்கள் மண்டல உதவி ஆணையர் வாசுகுமார் மற்றும் இளநிலைப் பொறியாளர் சந்திரசேகர் ஆகி யோரைச் சந்தித்து முறையிட்டனர்.

வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். இப் பகுதியில் உள்ள சாக்கடைகளை தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். குவிந்துகிடக்கும் குப்பைகளை, இரு நாட்களுக்கு ஒரு முறை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ச.நந்தகோபால் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

;