tamilnadu

ஜன.8 அகில இந்திய வேலை நிறுத்தம் விவசாய சங்கங்கள் ஆதரவு

திருப்பூர், ஜன. 4- ஜன.8 அகில இந்திய வேலை நிறுத் தத்திற்கு திருப்பூர் மாவட்ட விவசாய சங் கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகிய நிர்வாகிகள் கூட்டம் சனியன்று பல்ல டத்தில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும்  தள்ளு படி செய்யவேண்டும். தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் 200 நாட்கள் வேலையும், கூலி  ரூ.500 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். அத்துடன் நிலுவை யில் உள்ள சம்பள பாக்கி உடனே வழங்கிட வேண்டும். விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளிகளுக்கும் 60 வயது முடிந்தவர்க ளுக்கு மாதம் பென்சன் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். வேளாண் விளைபொருளுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவிகிதம் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம், எரிவாயு, எண்ணெய் குழாய்களை அமைப்பதைக் கைவிட்டு மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் நடத்தும் மறியலில் பங்கேற்பது என முடிவு செய் யப்பட்டது.  திருப்பூரில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் விச சார்பில் பி.வேலுச் சாமி, விதொச சார்பில் கே.சுப்பிரமணி ஆகி யோர் தலைமையில் பங்கேற்பது. அதே போல், பல்லடத்தில் வை.பழனிசாமி, எஸ்.துரைசாமி ஆகியோர் தலைமையிலும். அவிநாசியில் எஸ்.வெங்கடாசலம், ஏ.சண் முகம், ஊத்துக்குளி- ஆர்.குமார், ஆர்.மணி யன், உடுமலை- எஸ்.ஆர்.மதுசூதனன், அ.பஞ்சலிங்கம், தாராபுரம்- ஆர்.வெங்கட் ராமன், சி.சுப்பிரமணியம் ஆகியோர் தலை மையில் கலந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.  இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன்,  மாவட்ட செயலாளர் ஆர்.குமார், அ.இ.வி.தொ.ச. மாவட்ட தலை வர் சி.சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் அ.பஞ்சலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;