tamilnadu

பித்தளை பாத்திரத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

திருப்பூர், ஜன. 29 - திருப்பூர் அனுப்பர்பாளையம் வட்டார  பித்தளைப் பாத்திரத் தொழிலாளர்களுக் கான சம்பள உயர்வு உடன்பாடு குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை புதனன்று நடை பெற்றது. உற்பத்தியாளர்கள் ஆறு மாத கால அவகாசம் கோரியதை தொழிற்சங்கங் கள் நிராகரித்த நிலையில், அடுத்த வாரம் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. அனுப்பர்பாளையம் வட்டாரப் பாத் திரத் தொழிலாளர்களுக்கான முந்தைய சம்பள ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31ஆம் தேதியுடன் காலாவதியானது. எனவே புதிய சம்பள உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்ற வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு கோரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர்களுக்கு 50 சதவிகிதம், பித்தளை, செம்பு மற்றும் வார்ப்பு அயிட்டங்களுக்கு 60 சதவிகிதம், ஈயப்பூச்சு அயிட்டங்களுக்கு 70 சதவிகிதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் பாத்திர உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கடந்த 13ஆம் தேதி கடிதம் அளிக்கப்பட் டது. இந்நிலையில் பித்தளை பாத்திர உற் பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன் தொழிற் சங்க கூட்டுக்குழு நிர்வாகிகள் ஜன.29 புத னன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இப் பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கள் சார்பில் சிஐடியு சங்கத்தின் சார்பில் கே.ரங்கராஜ், கே.குப்புசாமி, ஏடிபி நிர்வாகி கள் ஆர்.தேவராஜ், பி.கலைமணி, ஏஐடியுசி நிர்வாகிகள் எஸ்.செல்வராஜ், பி.நாகராஜ், எல்பிஎப் நிர்வாகிகள் என்.வேலுச்சாமி, ஏ.தர்மலிங்கம், எச்எம்எஸ் நிர்வாகிகள் கே.திருஞானம், எஸ்.பாண்டியராஜ், ஐஎன் டியுசி நிர்வாகிகள் வி.ஆர்.ஈஸ்வரன், கே.அசோக், காமாட்சியம்மன் சங்க நிர்வா கிகள் டி.வி.முத்துக்கிருஷ்ணன், எஸ்.பி.அர்ச்சுனன், பிஎம்எஸ் நிர்வாகிகள் ஏ.டி.சீனிவாசன், எம்.லட்சுமி நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர். பித்தளைப் பாத்திர உற்பத்தியாளர் சங்கத் துணைத் தலைவர் பி.மனோகரன், செயலாளர் எம்.எஸ்.வி.முத்து, பொருளா ளர் கே.வி.குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இப்பேச்சுவாத்தையில் பித்தளை பாத்திர உற்பத்தியாளர்கள் தரப்பில் சம்பள உயர்வு வழங்குவதற்கு ஆறு மாத கால அவ காசம் வழங்க வேண்டும் என கேட்டனர். ஆனால் இதை ஏற்றுக் கொள்ள தொழிற் சங்க நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். சம்பள உயர்வு தொடர்பாக கால அவகாசம் என்ற கருத்தை நிராகரித்துவிட்டனர். இதைத் தொடர்ந்து உற்பத்தியாளர்கள் தரப்பில் ஒரு வாரத்திற்குள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டது.

;