tamilnadu

img

மோடி வந்தால் பொழப்பு இல்லை திருப்பூர் மக்கள் குமுறல்

ராஜாமணி அம்மாள் (60): இந்த தடவை நாங்க கதிர் அரிவாளுக்குத்தான் ஓட்டுப் போடுவோம், நான் மட்டுமில்லை, எங்க பகுதியில் இருக்க பெண்கள் எல்லாம் அதுக்குத்தான் ஓட்டுப் போடுவாங்க. மோடி எங்கள் வாழ்க்கையை கஷ்டப்படுத்திவிட்டார். சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய்க்கு விக்குது, கேபிள் டிவிக்கும் 250 ரூபாய் கட்ட வேண்டியிருக்கு. சிலிண்டருக்கு மட்டும் ஒரு வார சம்பளம் போயிருது. எப்பிடி நாங்க பிழைக்கிறது. எல்லாருமே மாற்றம் வேணும்னுதான் நினைக்கிறாங்க. மோடி கூட நிக்கிறதால ரெட்டை இலைக்கு ஓட்டு விழாது.ரேசன் கடையில 1000 ரூபா பொங்கலுக்குக் கொடுத்ததை சாதனைனு சொல்றாங்க. ஜெயலலிதா அம்மா இருந்தாங்க, சட்டதிட்டமா நடந்துட்டாங்க.ஆனா இவங்க என்ன செய்றாங்க. மக்கள் பணத்தை எடுத்து தர்ராங்க. சரி, முதியோர் பென்சன் மாசாமாசம் 1000 ரூபா தரணுமே, அதை ஏன் நிறுத்திட்டாங்கரெம்ப பேருக்கு கிடைக்கலையே? எடப்பாடி சரியில்லைங்க. ரெட்டலைக்கு ஓட்டு விழாதுங்க.      

        ..................

சலூன் கடை மகுடீஸ்வரன் (32): இந்த தடவை மாற்றம் வரணும். ராகுல்தான் வருவார்னு கடைக்கு வர்ரவங்க பேசிக்கிறாங்க. திருப்பூர் பனியன் தொழில் இருக்க ஊர். இங்க ஜிஎஸ்டி வந்ததில் இருந்து ஒரே பிரச்சனையா இருக்குது. சின்னச்சின்ன கம்பெனியெல்லாம் மூடிட்டாங்க. வேலையில்லை. மோடிக்கு மாற்றாக ராகுலுக்கு இந்த தடவை ஓட்டு விழும். திருப்பூர்ல கதிர் அரிவாளுக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள். மோடியுடன் இருப்பதால் ரெட்டை இலைக்கு ஓட்டு விழாது.            

    .....................

செக்கிங் சென்டர் மணி (64): தொழில் எல்லாம் முடிஞ்சு போச்சுங்க, இப்பத்தான் ரேசன் கடைக்குப் போயிட்டு வர்ரேன், அங்க போயி வரிசையில நிக்கிற பெண்கள் கிட்ட கேளுங்க என்ன சொல்றாங்கன்னு. நான் அங்க நாலு பேருட்ட பேசினேன். எல்லாம் இந்த மோடி ஆகாது. அவரு திரும்ப வந்தாருன்னா நம்ம பொழப்பு முடிஞ்சது, கட்டாயம் மாத்தித்தான் போடுவோம். ரெட்டை இலைக்கு ஓட்டுப் போட்டாலும் மோடிக்குத்தான் போகும். அதனால ரெட்டலைக்குப் போட மாட்டோம் என்று பெண்கள் சொல்கிறார்கள். நாங்கள் சுப்பராயனுக்கு கதிர் அரிவாளுக்குத்தான் போடுவோம்.   

          .....................

அமுதா (இல்லத்தரசி): இந்த தடவை கட்டாயம் மாற்றம் வரும். ஜிஎஸ்டி வந்ததில் இருந்து தொழில் கடும் நெருக்கடிக்குள் சிக்கி விட்டது. எதுவும் சரியில்லை. எங்கள் வீட்டில் மட்டுமில்லை, இந்த வீதியில் இருக்கும் பெண்கள் எல்லோருமே பேசிக் கொள்கிறார்கள். இந்த முறை மாற்றம் வர வேண்டும் என்று. இங்கு கதிர் அரிவாளுக்குத்தான் ஓட்டுப் போடுவோம். வீதியில் சாக்கடை சுத்தம் செய்வதில்லை, ரோடு குண்டும், குழியுமாக இருக்கிறது. உள்ளாட்சி நிர்வாகம் இல்லை. மக்கள் வரிப்பணத்தை எடுத்துத்தான் 2000 ரூபாய் தருகிறோம் என்கின்றனர். அதற்கெல்லாம் ரெட்டை இலைக்கு ஓட்டுப் போட மாட்டோம்.     

       .....................

அப்துல் ரகுமான் (56): தள்ளுவண்டி தையல் தொழிலாளி. போனதடவை அம்மா இருந்தாங்க, அவங்களுக்கு இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டேன். ஆனா இந்த தடவை போட மாட்டேங்க. அதிமுக மோடி கூட சேந்து நிக்கிறாங்க. மோடினாலதான் எல்லாமே கஷ்டமாயிருச்சு. பணம் செல்லாதுனு அறிவிச்சதில இருந்து எதுவும் சரியில்லீங்க. தார்பூசணி கடை வச்சேன், வியாபாரம் ஆகாம நடத்த முடியலை, பழ வியாபாரமும் செய்ய முடியலை. எதைச் செஞ்சாலும் பொளைக்க முடியலீங்க. விலைவாசி ஏறிக்கிட்டே போகுது. அதான் இந்த தடவை ஸ்டாலினுக்கு மாத்திப் போடலாம்னு இருக்கேன்.    

       .....................

குமரன் (46): 15 வருடம் மெர்சன்டைஷிங் மேனேஜராக ஈஸ்ட்மேனில் வேலை பார்த்தேன். மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நான் பல காரணங்களால் விலகிவிட்டேன். ஜிஎஸ்டி பிரச்சனைக்கு அப்புறம் தொழில்கஷ்டமாகிப் போச்சு. நல்ல நிலையில் இருந்து இப்போது சின்ன மொபைல் கடை வைத்து இருக்கிறேன். இந்த நிலைக்கு நான் பாதிக்கப்பட்டதற்கு மோடி ஆட்சிதான் காரணம். மோடி ஆட்சியில் எல்லாமே கஷ்டமாகிப் போச்சு. மறுபடியும் யாராவது மோடிக்கு ஓட்டுப் போட்டா, அவங்களே சொந்தமா குழி தோண்டி உள்ளே படுத்து மண்ணள்ளிப் போட்டுக்கிட்டதாதான் அர்த்தம்.தாமரைக்கும் ஓட்டு விழாது, இரட்டை இலைக்கும் ஓட்டு விழாது. நாங்கள் கதிர் அரிவாளுக்குத்தான் ஓட்டுப் போடுவோம். 

;