திருப்பூர், பிப். 29– டெல்லி போன்ற திருப்பூரிலும் கலவரத்தை நடத்தும் உள்நோக்கத் துடன் இந்து முன்னணி போராட் டத்தைத் தொடங்கி இருப்பதாக திருப் பூர் எம்.பி. கே.சுப்பராயன் கூறினார். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலை வர்கள் கூட்டம் வெள்ளியன்று மாலை திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக அலு வலகத்தில் நடைபெற்றது. இதில், திமுகவின் வடக்கு மாவட்ட செயலா ளர் க.செல்வராஜ், மாநகர செயலாளர் டி.கே.டி. மு.நாகராஜ், காங்கிரஸ் கட்சி யின் மாநகர மாவட்ட தலைவர் ஆர். கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் செ.முத்துக்கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலா ளர் செயலாளர் எம்.ரவி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் திருப் பூர் எம்.பி கே.சுப்பராயன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: தில்லியில் நடந்த கலவரத்தில் பாஜக அனுப்பிய குண்டர் படைதான் வெறித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் தொடர்ச்சிதான் திருப்பூரில் தற்போது இந்து முன்னனி தங்களது போராட் டத்தை தொடங்கியுள்ளது. ஆகவே, தில்லி போன்று திருப்பூரிலும் கலவ ரத்தை தூண்டும் உள்நோக்கம் இருப் பதாக மக்கள் சந்தேகப்படுகிறார்கள். அவ்வாறு நடந்ததால் திருப்பூரின் தொழில் அழிந்து போகும், திருப்பூரின் மூச்சு நின்றுவிடும். எனவே, இத் தகைய கலவரம் நடந்துவிடக்கூடாது என்பதற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் கே.விஜயகார்த்திகேயன், போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் ஆகியோருக்கு புகார் அளிக்கவுள்ளோம் என்றார்.