அவிநாசி, ஜூலை 22 – சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.4 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்களன்று நடைபெற்ற ஏலத்தில் 130 மூட்டைகள் வரத்து இருந்தன. இதில் குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக் கடலை ரூ.6,800 முதல் ரூ.7,200 வரை யிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.6,420 முதல் ரூ. 6,570 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ, 5,900 முதல் ரூ.6,010 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.4 லட்சத்திற்கு ஏலம் நடை பெற்றது.