tamilnadu

சேவூரில், ரூ.2 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, ஜூன் 15- அவிநாசி அருகே சேவூர் ஒழுங்கு முறை விற்ப னைக்கூடத்தில் திங்களன்று நடைபெற்ற நிலக்க டலை ஏலத்தில் ரூ.2 லட்சத்திற்கு வர்த்தகம் நடை பெற்றது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 100 மூட்டைகள் வந்தி ருந்தன. இதில், முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,400 முதல் ரூ.6,580 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.5,800 முதல் ரூ.5,900 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.5,100 முதல் ரூ.5,250 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில், 8 வியாபாரிகள், 15 விவசாயிகள் பங் கேற்றனர்.

;