tamilnadu

தலித் பெண் ஊராட்சித் தலைவரை அலைக்கழிக்கும் அரசு நிர்வாகம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

திருப்பூர், மே 9 - தாராபுரம் அருகே கவுண்டச்சிப்புதூர் ஊராட்சிமன்றத்தின் தலித் பெண் தலை வர் மீது வன்கொடுமை தாக்குதல் நடத்தி யவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன் னணி வலியுறுத்தி உள்ளது.  இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டச் செயலாளர் ச.நந்தகோ பால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கவுண் டச்சிபுதூர் ஊராட்சித் தலைவராக சுயேட் சையாகப் போட்டியிட்டு, வெற்றி பெற்றவர் ஆர். செல்வி.  இந்நிலையில், கடந்த 4 ஆம்  தேதி ஊராட்சிமன்ற அலுவகத்தில் 6 ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.குப்பு சாமி, சீருடை கொடுப்பது குறித்து ஏன்  என்னிடம் சொல்லவில்லை என்று தகராறு செய்துள்ளார்.

பிறகு, பெண்ணைக் குறித் தும், சாதியைக் குறித்தும் மிக இழிவான ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டே, உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன் என்று தாக்கவும் பாய்ந்துள் ளார். இவரை அருகில் இருந்தோர்  காப்பாற் றியுள்ளனர்.  இதுதொடர்பாக, செல்வி தாராபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு அலை பேசி மூலம் தகவல் தெரிவித்துவிட்டு, தாரா புரம் காவல்நிலையத்தில் குப்புசாமி மீது  புகார் அளித்துள்ளார். காவல் உதவி  ஆய்வாளர் நேரில் சென்று விசாரித்துள் ளார். ஆனாலும், புகாரைப் பெற்றுக் கொண் டதற்கு சிஎஸ்ஆர் கூட கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட செல்விக்கு நீதி உடனடி யாகக் கிடைக்காததால்,  மே 5 ஆம் தேதி செவ்வாயன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து செல்வி, அவரது கணவர் ரமேஷ் ஆகியோர் புகாரளித்துள்ளனர். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து மே 7 ஆம் தேதி அன்று, மீண்டும் மாவட்ட ஆட்சி யரையும், மாவட்ட காவல் கண்காணிப் பாளரையும், ஊராட்சிகளின் உதவி இயக்கு னரையும், செல்வி, ரமேஷ் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச்  செயலாளர் ச.நந்தகோபால்  உள்ளிட்டோர்  சந்திக்கச் சென்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ளே செல்லவே போராட வேண்டியிருந்தது. இதன்பின் பெற்றுக் கொண்ட மனுவுக்கு ஒப்புகைச் சீட்டு கூட வழங்க மறுத்தனர்.  மேலும், தாராபுரத்தில் சிபிஎம் செயலா ளர் கனகராஜ், அவர்களுடன் சென்று புகார்  அளித்தபோது காவல்நிலையத்தில் சாதிச் சான்று நகல் ஒன்றைப் பெற்றுக் கொண்டு, எப்ஐஆர் வழங்கியுள்ளனர். அவமானத்தி னாலும், அதிர்ச்சியினாலும், அரசு அதிகாரி களின் அலட்சியத்தினாலும் 4 நாட்களுக்கும் மேலாக ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு செல்லாமல் இருந்துள்ளார்.  ஆகவே, மக்கள் பிரதிநிதியான தலித் பெண்ணுக்கு உரிய பாதுகாப்பும், நீதியும் வழங்கப்பட வேண்டும். குற்றவாளி குப்புசாமி உடனடி யாகக் கைது செய்யப்பட வேண்டும். மக்கள்  பிரதிநிதித்துவச் சட்டப்படி, குப்புசாமியின் ஊராட்சி உறுப்பினர் பதவி பறிக்கப்பட்ட வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

;