tamilnadu

இலவச வேட்டி, சேலை ஒதுக்கீட்டில் மோசடி ரேசன் கடை விற்பனையாளர்கள் அச்சம்

திருப்பூர், ஜன. 23 - திருப்பூரில் பயனாளிகள் எண்ணிக் கைக்கு குறைவாக இலவச வேட்டி, சேலை  ஒதுக்கீடு செய்துவிட்டு முழு ஒதுக்கீடு செய்திருப்பதாக இருப்புக் கணக்கில் பதிவு செய்திருப்பதாக ரேசன் கடை விற்ப னையாளர்கள் கூறினர். இதனால் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சுகின்றனர். இது பற்றி ரேசன் கடை விற்பனை யாளர்கள் தரப்பில் கூறியதாவது: பொங்கல்  பண்டிகைக்கு ரேசன் கடைகளில் வறுமைக்  கோட்டுக்குக் கீழ் இருக்கும் அரிசி அட்டை தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. இதன்படி ஒரு கடை யில் மொத்தம் சுமார் 1000 கார்டுகள் இருந்தால் அதில் இலவச வேட்டி, சேலை பெறத் தகுதியுடையோர் 500 பேருக்கு 500 ஜோடி இலவச வேட்டி, சேலைகள் வழங்க வேண்டும். ஆனால் தற்போது அதில் சுமார் 400 ஜோடி வேட்டி, சேலைகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டு 500 ஜோடி  ஒதுக்கப்பட்டிருப்பதாக இருப்புக் கணக் கில் பதிவு செய்துள்ளனர். இதனால் தகுதி யுள்ள பயனாளிகள் அனைவருக்கும் வேட்டி, சேலை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இருப்புக் கணக் கின்படி 100 பேருக்கு உரிய வேட்டி, சேலை கள் விநியோகம் செய்யாமல் விடப்பட்ட தாக தெரியும். இதனால் கடை விற்பனையாளர்கள் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டக் கூடிய அச்சுறுத்தல் உள்ளது. ஏற்கெனவே கடந்த 2019ஆம் ஆண்டிலும் இதேபோல் குறைவாக ஒதுக்கீடு செய்துவிட்டு, முழு அளவு வழங்கியதாக இருப்புக் கணக்கில் பதிவு செய்யப்பட்டது. அப்போது இதைப் பற்றி அதிகாரிகளிடம் முறையிட்டபோதும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அந்த  இருப்புக்  கணக்கில் உள்ள பற்றாக்குறை யே சரி செய்து எழுதப்படாத நிலையில், மீண்டும் இந்த 2020ஆம் ஆண்டிலும் இவ்வாறு செய்திருப்பது வியப்பளிக்கிறது. இதில் ரேசன் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு முன்பே, மேல் மட்டத்தில் இருக்கக்கூடியோர் இலவச வேட்டி, சேலை களை கையாடல் செய்துவிட்டு, கடைக் காரர்கள் மீது பழிபோடும் சதிச் செயலாக  இது இருக்கிறது என்றும் விற்பனை யாளர்கள் புகார் கூறினர். அதேசமயம் ஆளும் கட்சியைச் சேர்ந்த  கூட்டுறவு சங்கத் தலைவராக இருப்போர்,  தங்கள் கட்சியைச் சேர்ந்த விற்பனையாளர் களிடம் இதைப் பற்றி கண்டுகொள்ள வேண்டாம் என கூறியிருப்பதாகவும், எனவே சில கடைக்காரர்கள் இந்த முறை கேடு பற்றி வாய்மூடி மௌனம் காக் கின்றனர் எனத் தெரிவித்தனர். அதேசமயம் நேர்மையாக செயல்படக் கூடிய விற்பனையாளர்கள் இதைப் பற்றி  அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்கள்  கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துவ தாக தெரிவித்தனர்.  இந்த விவகாரம் பற்றி மாவட்ட வழங்கல்  அலுவலரைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவர் தொடர்பு கிடைக்கவில்லை.  இலவச வேட்டி, சேலை விநியோகத்தில் முறைகேடு நடக்காமல் தடுப்பதுடன், யாரேனும் தவறிழைத்துவிட்டு கீழ்மட்ட ஊழியர்களை சிக்க வைக்க முயன்றால் அதை தடை செய்யவும் வேண்டும் என ரேசன் ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

;