tamilnadu

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இடிக்கப்பட்ட கட்டிடக் குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசுபாடு உடனே அகற்ற மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 13 – திருப்பூர் பழைய பேருந்து நிலை யத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய கட்டுமானம் உருவாக்குவதற் காக தற்போதுள்ள கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன. இதனால் கட் டிட இடிபாடு குப்பைகள் தேங்கி, தூசு பரவி சுற்றுச்சூழல் கடுமையாக மாசு படுகிறது. எனவே இந்த கட்டிட குப்பை களை உடனடியாக அகற்றுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தி உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தெற்கு ஒன்றியக்குழுக் கூட்டம் சனிக்கிழமை ஒன்றியக்குழு உறுப்பி னர் பா.லட்சுமி தலைமையில் நடை பெற்றது. இதில், மாநிலக்குழு உறுப் பினர் கே.காமராஜ், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ் ணன், ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி உட்பட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தற்போது திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. எவ்வித பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமல் இப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இடிக் கப்பட்ட கட்டிடப் பொருட்கள் மற்றும் குப்பைகள் தேங்கிக் கிடக்கிறது. கடு மையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்ப டுகிறது.

இப்பகுதியைச் சேர்ந்தவர்க ளும், இந்த பாதையில் பயணிப்போ ரும் ஏராளமான கட்டுமான தூசுக ளைச் சுவாசித்து சிரமப்பட்டுக் கொண் டிருக்கின்றனர். இதனால் பல தொற்று நோய் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கி றது. எனவே, கட்டிடங்களை இடித்த வுடன் அப்புறப்படுத்த வேண்டும், மேலும், இங்கிருந்து தூசு பரவா மல் முறையான பாதுகாப்பு ஏற்பாடு களைச் செய்து பணியை தொடர வேண் டும் என்று திருப்பூர் மாநகராட்சி நிர்வா கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் தெற்கு ஒன்றியக்குழு வலியுறுத்தி உள்ளது.

;