tamilnadu

img

குடிநீர் இணைப்பை துண்டிக்க வந்த அலுவலர்கள் சிறைப்பிடிப்பு

அவிநாசி, ஜூன் 2- அவிநாசி அருகே உள்ள கருவலூர் ஊராட்சியில் ஆற்றுக்குடிநீர் இணைப் பினை துண்டிக்க வந்த குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களை அப்பகுதி பொது மக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் மாவட்டம், கருவலூர் ஊராட்சி யில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் குடிநீருக் காக வைக்கப்பட்டிருந்த கருவலூர் மேட்டுப் பாளையம் சாலையில் உள்ள ஆற்றுக்குடி நீர் பொதுக் குழாய் சீரமைப்புப் பணிக்காக கடந்த ஆண்டு அகற்றப்பட்டது. இதைய டுத்து கருவலூர் கோயில்பாளையம் சாலை யில் தற்காலிகமாக ஆற்றுக்குடிநீர் பொதுக் குழாய் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இக்குழாயை துண்டிப்பதற்காக குடிநீர் வடி கால் வாரியத்தினர் வந்திருந்தனர்.

இதை யறிந்த பொதுமக்கள் குடிநீர் இணைப்பைத் துண்டிக்க எதிர்ப்புத் தெரிவித்து குடிநீர் வடி கால் வாரியத்தினரை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த அவிநாசி காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் ஊராட்சி நிர்வாகத்தினர் உரிய அனுமதியின்றி குடிநீர் இணைப்பு எடுத்துள் ளதாக குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரி வித்தனர்.

இதற்கு ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், நாள்தோறும் கருவலூர் ஊராட்சிக்கு 60 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் போதுமான அளவு கிடைப்பதில்லை. இப்பகுதி மக்கள் இந்த பொதுக்குழாயையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். எனவே, இக்குழாயை அகற்ற கூடாது என ஊராட்சி நிர்வாகத்தினர், பொதுமக்கள் கூறினர். இதையடுத்து காவல் துறையினர் ஒன்றிய நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தி இறுதி முடிவு செய்யலாம். அதுவரை பொதுக்குழாய் குடிநீர் இணைப் புத் துண்டிக்க வேண்டாம் என தெரிவித்த னர்.இதனைத்தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரியத்தினர் இணைப்பை துண்டிக்காமல் அங்கிருந்து சென்றனர்.

;