tamilnadu

img

தன்னார்வலர்கள் வடிவமைத்த நவீன குப்பைத்தொட்டி - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பூர், மே 28 - தன்னார்வலர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட நவீன குப்பைத் தொட்டி சேவையினை திருப்பூர் மாவட்ட  ஆட்சியர் க. விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்துப் பார்வையிட்டார். திருப்பூர் மாவட்டம், வடக்கு வட்டம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சக்தி நர்சிங் மருத்துவ மனை வளாகத்தில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் பயன்படுத்தும் வகையில் தன்னார்வலர்களின் (யங் இந்தியா) பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட நவீன குப்பைத் தொட்டியின் சேவையினை மாவட்ட ஆட்சி யர் க.விஜயகார்த்திகேயன் வியாழன்று துவக்கி வைத்து  தெரிவிக்கையில், திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட, மாநக ராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் ஆகிய பகுதிகளில் பொது சுகாதாரத்தை பேணி க்காக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதனடிப்படையில் மே  தன்னார்வலர்களின் பங்களிப்புடன் நவீன குப்பைத் தொட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

இக்குப்பைத் தொட்டியில் இருக்கும் குப்பையின் அளவு என்னவென்று அதை பராமரிக்கும் நிர்வாகி களுக்கும், சுகாதாரப்பணியில் ஈடுபட்டுள்ள வாகன ஓட்டுநர் மற்றும் ஊழியர்களுக்கும் தகவல் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழியும் முன் தகவல் ஊழியர் களுக்குச் சென்று விடும். இதனால் ஒரு பகுதியில் நாள்தோறும் எவ்வளவு குப்பை வருகிறது என்று அறிய முடியும். இதுபோல் குப்பைத் தொட்டிகளை பல்வேறு இடங் களில் வைக்கும் பட்சத்தில் அந்தந்த இடங்கள் தூய்மையாக வைத்துக்கொள்ள முடிகிறது. முதற்கட்டமாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பயன்படுத் தப்படவுள்ளது. இந்த நவீன குப்பைத்தொட்டியினை உருவாக்கிய தன்னார்வலர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது. மாநகர நல அலுவலர் பூபதி. திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் பாபு. தன் னார்வ தொண்டு நிர்வாகிகள் கதிரேசன். உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;