திருப்பூர், பிப். 20- தமிழகத்தில் அருந்ததியர்களை அடித்துப் படு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருப்பூர் மாவட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செஞ்சி தலித் இளைஞர் சக்திவேல் அடித்துப் படுகொலை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், காட்டுத்தெள்ளூர் அருந்ததிய பெண் சசிகலா அடித் துப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மேற்கண்ட படுகொலையை செய்த குற்ற வாளிகள் மீது வன்கொடுமை தடுப்புத் திருத்தச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியு றுத்தி முழக்கமிடப்பட்டது. இந்த ஆர்ப்பட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் துணைச் செயலாளர் ஜி. சம்பத் தலைமை வகித்தார். இதில், வேலம்பாளையம் நகரச் செயலாளர் பி. பாபு, தமிழக மாணவர் கழகம் சந்தோஷ், மாவட்டச் செய லாளர் ச. நந்தகோபால் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இதில், மாவட்டத் தலைவர் ஆர்குமார் மற்றும் சகோதர அமைப்பை சேர்ந்தோர் பங்கேற்ற னர்.