tamilnadu

img

பேரூராட்சி இடத்தை ஆக்கிரமித்து கடை அமைப்பு அனைத்து கட்சிகள் அகற்றக் கோரிக்கை

திருப்பூர், செப்.18- குன்னத்தூரில் பொது இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தேநீர் கடையை அகற்ற அனைத்துக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் நகர அனைத்து அரசியல் கட்சிகள் ஆலோசனை கூட்டம் திமுக நகரச்  செயலாளர் சக்திவேல் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,  குன்னத்தூர் நகரில் போக்குவரத்துக்கு  இடையூறாகவும், விபத்து ஏற்படுத்தும்  வகையிலும், பேரூராட்சி நிர்வாகத் தில் முறையான அனுமதி பெறாமலும் குன்னத்தூர் வாரச்சந்தை சுங்ககேட் முன்புள்ள இடத்தில் செல்வாக்கு மிக் கவர்களால் அமைக்கப்பட்டுள்ள தேநீர் கடையை உடனடியாக அகற்ற  தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  மேலும், முறைகேடாக அமைக்கப் பட்டு வந்த தேநீர் கடையை அகற்றக் கோரி நேரில் புகார் மனு அளித் தும் நடவடிக்கை எடுக்காத செயல்  அலுவலரை இக்கூட்டம் கண்டிக் கிறது.

குன்னத்தூர் பேரூராட்சி நிர்வா கம், அந்த தேநீர் கடையை அகற்ற நட வடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில்  வரும் 28ஆம் தேதி காலை 10 மணி அள வில் குன்னத்தூர் பேரூராட்சி அலுவ லகத்தில் கோரிக்கை நிறைவேறும் வரை பொதுமக்களைத் திரட்டி காத்திருக்கும் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இக்கூட்டத்தில் திமுக வெங்கிடு, முருகசாமி, காங்கிரஸ் சந்தி ரன், மார்க்சிஸ்ட் கட்சி ச.பன்னீர்செல் வம், பா.சின்னச்சாமி, கொங்கு இளை ஞர் பேரவை பாலச்சந்திரன்,  தேமுதிக சுந்தரம், ஆதித்தமிழர் பேரவை அய் யாவு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

;