tamilnadu

img

அடுக்குமாடிக் குடியிருப்பில் வெளிப்படைத் தன்மையுடன் வீடுகள் ஒதுக்கிடுக மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 18– திருப்பூர் மாநகரில் பல ஆண்டு களாகக் குடிசைப் பகுதியில் குடி யிருக்கும் ஏழை மக்களுக்கு, குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடிக் குடியிருப்பில் வெளிப்ப டைத் தன்மையுடன் வீடு ஒதுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றி யச் செயலாளர் சி.மூர்த்தி, தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெய பால், வடக்கு ஒன்றியச் செயலா ளர் கே.பழனிச்சாமி உள்ளிட் டோர் புதனன்று மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளரி டம் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது, திருப்பூர் நகரில் 110 குடி சைப்பகுதிகளில் ஒரு லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். சில பகு திகள் மாறுதலுக்கு உள்ளாகியி ருக்கின்றன. ஆனால், தற்போதும் திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஜம்மனை ஓடை, துளசிராவ் வீதி, சங்கிலிப் பள்ளம் ஓடை, பெரியதோட்டம், சத்யாநகர், காயிதே மில்லத் நகர், குறிஞ்சி நகர்,  ராஜீவ் நகர், நொய் யல் ஆற்றங்கரையோரம், ஆலாங் காடு, சுகுமார் நகர் மற்றும் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட் பட்ட நல்லாற்று ஓடை, அங்கேரி பாளையம், ஆத்துப்பாளையம், பிச்சம்பாளையம் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் 40 வருடங்களுக்கு மேலாக 9 ஆயிரம் ஏழை, எளிய குடும்பத்தார் குடிசைகளில் வசித்து வருகின்றனர்.

இவர்க ளில் பெரும்பாலும் பனியன் தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலாளர்களாக உள்ளனர்.  கடந்த 2006ஆம் ஆண்டு அர சுப் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு வீட்டுமனைப் பட்டா கேட்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். இது தவிர நீர்நிலைப் புறம்போக்கு, குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பட்டா கேட்டு தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்து வருகின்றனர். இம்மக்க ளுக்கு வீடு உத்தரவாதம் செய்ய வேண்டியது அரசின் கடமையா கும். இந்நிலையில், குடிசைமாற்று வாரிய கோவைக் கோட்ட அலுவ லகத்தின் மூலம் திருப்பூர் நெருப் பெரிச்சல், பழவஞ்சிபாளையம் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வழங்குவதற்கு பயனாளிகள் தேர்வு செய்யும் பணி நடை பெற்று வருவதாகவும், சிலரி டம் தவணைத் தொகை வாங்கியி ருப்பதாகவும் தகவல் வருகிறது.

எனவே நீர்நிலைப் புறம்போக்குக ளில் வசிப்போர் உள்ளிட்ட பய னாளிகளை வெளிப்படைத் தன் மையுடன் தேர்ந்தெடுத்து வீடுகள் வழங்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் ஒன்றிய குழுக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

;