அவிநாசி, பிப். 13- அவிநாசியில் ரூ.45 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. அவிநாசி வேளாண்மை உற்பத்தி யாளர் கூட்டுறவு விற்பனை சங்கத் தில் பிரதிவாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். இந்த வாரம் நடந்த பருத்தி ஏலத்திற்கு 2,821மூட்டை பருத்தி வந்திருந்தது. 250 விவசாயிகளும், 10 வியாபாரிகளும் கலந்து கொண்ட ஏலத்தில் ஆர்சிஎச் ரகப் பருத்தி குவிண் டால் ரூ.4,500 முதல் ரூ.5,400 வரையிலும், டி.சி.எச் ரகம் குவிண்டால் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.6,700 வரையிலும், மட்ட ரகம் குவிண்டால் ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரையிலும் ஏலம் போனது.