tamilnadu

திருப்பூரில் மூங்கில் பூங்கா அமைக்க மாநகராட்சி ஒப்பந்தம்

 திருப்பூர், பிப். 27- திருப்பூரில் 12 ஏக்கரில் மூங் கில் பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் மேற்கொண் டுள்ளது.  திருப்பூரில் சுற்றுச்சூழல் மூங் கில் பூங்கா அமைப்பதற்காக மாந கராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து கமிஷனர் சிவக்குமார் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நிரு பர்களுக்கு பேட்டியளித்தார். அப் போது அவர் கூறியதாவது:- திருப் பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தூய்மை இந்தியா திட்டம், அம்ரூத் திட்டம் நீர்நிலை மேம்பாடு மற் றும் பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் வழிகாட்டுதல் மற் றும் நெறிமுறைகளின் கீழ் சுற்றுச் சூழலினை மேம்படுத்திட, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூங்கில் பூங்கா
இதனடிப்படையில், அம்ரூத் அபிவிருத்தி திட்டத்தில் குடிநீர் திட்ட பணிகளுக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்றுவதால், அதற்கு இணையாகவும், கூடுதலா கவும் மரங்களை நட முடிவு செய் யப்பட்டுள்ளது. மேலும், காற்று மாசினைகுறைத்திடவும், கார்பன் வெளியேற்றத்தினைக் கட்டுப்ப டுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள் ளது. இதனிடையே முதற்கட்ட மாக இடுவாய் ஊராட்சியில் மாநக ராட்சிக்கு சொந்தமான 11.89 ஏக் கர் இடத்தில் மூங்கில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. இதற்காக வெற்றி நிறுவனம் திருப்பூர் மற்றும் இந்திய வன மர பியல் ஆராய்ச்சி மையம், கோவை மரபியல் காடுகள் மற்றும் இனப் பெருக்க நிறுவனத்துடன் ஒருங்கி ணைந்து இந்த பூங்காவை அமைக்க ஒப்பந்தம் மேற்கொள் ளப்பட்டுள்ளது.
30 வகை மூங்கில்  
இந்த மூங்கில் பூங்கா பொழுது போக்குத் தலமாக அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மூங் கில் பூங்காவில் பீமா உள்ளிட்ட 30 வகைகளை சேர்ந்த மூங்கில்கள் வளர்க்கப்பட உள்ளது. இந்த வெவ்வேறு வகையான மூங்கில் கள் இந்தியாவின் பல்வேறு மாநி லங்களில் இருந்து கொண்டுவரப் பட்டு, விரைவில் இந்த பணிகள் தொடங்க உள்ளது. மூங்கில் மரங் கள் குறிப்பிட்ட அளவு வளர்ந்த பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற் காக பூங்கா விடப்படும். மேலும், நொய்யல் கரை உள்ளிட்ட பகுதிக ளிலும் மூங்கில் மரங்கள் வளர்க்கப் படும்.
பராமரிப்பு 
வெற்றி அமைப்பு 7 ஆண்டுக ளுக்கு மூங்கில் இனங்களை பாது காத்து, பராமரித்து வளர்க்கக் கூட்டு ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பூங் காவை 10 ஆண்டிற்கு உருவாக்கி, பராமரிக்கவும் அதற்கான செல வுத்தொகையை ஏற்றுக்கொள்வ தாக வெற்றி நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநகராட்சியின் நிதியின் மூலமாக வேலி மற்றும் ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து நீர்்பாசன வசதி செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார். இதில், பொறியாளர் ரவி, செயற்பொறியாளர் சபியுல்லா, உதவி செயற்பொறியாளர் கண் ணன், உதவி பொறியாளர் ராம் மோகன், மாநகராட்சி உதவி திட்ட அமைப்பாளர் சவுதாம் பிகை, வெற்றி அமைப்பு தலைவர் சிவராம் உள்பட பலர் உடன் இருந் தனர்.

;