tamilnadu

97 சதம் வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் கொரோனா தொற்று திருப்பூர் ஆட்சியர் தகவல்

திருப்பூர், ஜூலை 22- திருப்பூரில் 97 சதவிகித கொரோனா தொற்றுகள் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலமே பரவியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 541 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலை யில், திருப்பூர்  மாநகர சுகாதாரத்துறை சார்பில் குமார் நகர், முருகம்பாளையம் பகுதியில் பொது மருத்துவ முகாம் புதனன்று நடைபெற்றது.

இம்முகாமை பார்வையிட்டபின் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், திருப்பூரில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலமே 97 சதவிகித கொரோனா தொற்று பரவி உள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும், மாநகராட்சி முழுவதும் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவகிறது.

24 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் வரும் வகையில் ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்து. எனவே அத்தியாவசிய அவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியூர்களில் இருந்து திருப்பூர் வருபவர்களுக்கு இ-பாஸ் முறையில் அனுமதி வழங்கப் படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

;