tamilnadu

கொரோனா முடக்கம் வங்கிகளில் தனிநபர் வீட்டுக் கடன் தருவது கடும் வீழ்ச்சி

திருப்பூர், ஆக. 12 - கொரோனா பொது முடக்கத்தால் பல்வேறு விதமான பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வங்கி களில் தனிநபர் கடன்கள் மற்றும் வீட்டுக் கடன்கள் தருவதும் மிக மோச மான அளவுக்கு வீழ்ச்சி அடைந்து உள்ளது. பின்னலாடைத் தொழில் நகர மான திருப்பூரில் ஏற்றுமதி, உள் நாட்டு உற்பத்தி என ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இதனால் இங்குள்ள மக்களிடம் பணப்புழக்கம் ஓரளவு உள்ளது. வசதி படைத்தவர் கள் மட்டுமின்றி, நடுத்தர வர்க்கத்தி னர் மற்றும் தொழிலாளர்கள் வங்கிக் கடன் பெற்று அவரவருக்கு ஏற்ற அள வுக்கு வீடுகள் கட்டுவதும் உண்டு.

ஆனால் இந்த கொரோனா பொது முடக்கத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது போல, வீடுகள் கட்டு வதிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள் ளது. குறிப்பாக, மாத சம்பளம் வாங்கக் கூடிய நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் வங்கிகளில் தனி நபர் கடன் மற்றும் வீட்டுக் கடன்  பெற்று வீடுகள் கட்டுவது கிட்டத் தட்ட முடங்கிப் போயுள்ளது. பின்ன லாடைத் தொழில் நிறுவனங்களில் உயர் வருமானம் பெறக்கூடிய நிர்வாகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த காலத்தில் மிகப்பெரும் அள வுக்கு வேலையை விட்டு அனுப்பப் பட்டுள்ளனர். திருப்பூரில் முன்னணி ஏற்றுமதி நிறுவனமான ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தில் மட்டும் ஆயிரத்து 200க்கும் மேற்பட் டவர்கள் வேலையை விட்டு நிறுத்தப் பட்டு விட்டனர்.

 இதுபோல் பல்வேறு நிறுவனங் களிலும் இடைநிலை நிர்வாகப் பிரிவில் வேலை செய்தவர்கள் எண் ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வருமானக் குறைப்பும் செய் யப்பட்டுள்ளது. இது தவிர தொழிலா ளர்களுக்கும் வேலை அளவு குறைக் கப்பட்டிருக்கிறது. இதனால் அவர்கள் பெறும் ஊதியமும் குறைந் துள்ளது. இந்த சூழ்நிலையில் வீடு கட்டுவதற்கான திட்டங்களை பலர்  கைவிட்டு விட்டனர். வங்கிக் கடன்  பெறுவதற்கு விண்ணப்பம் செய் வோர் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவிட்டது.  வங்கிகளில் கடன் சேவை பெற் றுத் தரும் பணியாளர் ஒருவர் கூறுகை யில், ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் மாதத்துக்கு சராசரியாக 10 விண்ணப் பங்களாவது வீட்டுக் கடன் கோரி வரும். ஆனால் தற்போது 2 அல்லது  3 விண்ணப்பங்கள் கூட வருவ தில்லை என்று தெரிவித்தார். அதேசமயம் குறைந்த வருவாய் பிரிவினருக்கு வீடு கட்டித் தரக்கூடிய ஹவுசிங் புரமோட்டர் ஒருவர் கூறு கையில், வங்கிகளில் வீட்டுக் கடன் பெற விண்ணப்பித்தாலும் சொத்து  மதிப்புக்கு ஏற்ப கடன் தருவ தில்லை என்று தெரிவித்தார்.

உதார ணத்துக்கு ரூ.10 லட்சம் கடன் கேட்டால், சாதாரண காலங்களில் பிணைய சொத்து மதிப்பு, கடன் கேட் போரின் மாத வருமானம் உள்ளிட் டவற்றைச் சரி பார்த்து, கேட்ட அளவு தொகை அல்லது 90 சதவிகிதம் கடன் வங்கிகளில் ஒப்பளிக்கப்பட்டு கொடுக்கப்படும். ஆனால் இப்போது அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும் வங்கிகள் முழுக் கடன் தொகை தருவதில்லை. அதிகபட்சம் 50 முதல் 60 சதவிகிதம் மட்டுமே கடன்  தருகின்றனர், என்று தெரிவித்தார். ஆக, மக்களிடம் நிதி நிலையும் மோசமடைந்து வீடு கட்டுவது, புதிய கடன் பெற விண்ணப்பம் செய்வதும்  குறைந்துள்ளது. அதேசமயம் வங்கி களும் இன்றைய சூழ்நிலையில் கடனை விடுவிப்பதில் தயக்கம் காட் டுகின்றன. மத்திய அரசு பல்வேறு சலுகைகள் வழங்கி வருவதாக என்ன தான் அறிவித்தாலும் கூட, அது வெற்று அறிவிப்புகளாகத்தான் உள் ளன. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத் தைக் குறைத்தாலும் கூட பல னில்லை என்பதைத்தான் திருப்பூரின் அனுபவம் காட்டுகிறது.

புதிய கடன் பிரச்சனையில் இந்த  நெருக்கடி ஒருபுறம் இருக்க, மற் றொரு பிரச்சனையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அதாவது ஏற் கெனவே நடுத்தர வருவாய் பிரிவினர் இஎம்ஐ கட்டி வீடு, கார் உள்ளிட்ட இதர பொருட்களை வாங்கிப் பயன் படுத்தி வந்தனர். கொரோனா கால  நிவாரணமாக ஆறு மாத காலத்துக்கு  இஎம்ஐ கடன் தவணை செலுத்து வதிலும் கால அவகாசம் வழங்கப்பட் டிருந்தது. மார்ச் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதத்துடன் இந்த அவ காசம் முடிவுக்கு வருகிறது. இனி  செப்டம்பர் மாதத்தில் வழக்கமான கடன் தவணையை வங்கிகளுக்குச் செலுத்த வேண்டும். ஆனால் பலர் வேலையிழந்து, வருமானத்தை இழந்து என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருக் கின்றனர்.

வங்கிகள் கடன் வசூல் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங் கினால் உள்ளடங்கியுள்ள பிரச்சனை வெளிப்படையாக வெடிக்கும் என்றும் நிதிச் சேவை ஆலோசகர் ஒருவர் தெரிவித்தார். மக்களின் வாழ்வு பல்வேறு வகையிலும் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருவதன் ஒரு வெளிப் பாடாக, அரசு மற்றும் தனியார் வங்கிகளில் தனிநபர் மற்றும் வீட்டுக் ்கடன் தருவதும் கடும் சரிவைச் சந்தித் திருப்பது வெளிப்படுகிறது. எனவே தொழில்துறை மற்றும் மக்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் வங்கிகள் கடன் தருவது, கடன் வட்டிக் குறைப்பு, கால அவகாசம் உள் ளிட்ட உண்மையான மீட்பு நடவடிக் கைகளை மத்திய அரசு மேற்கொள்ள  வேண்டும் என மக்கள் எதிர்பார்க் கின்றனர். (ந.நி)

;