tamilnadu

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரமாக்கிடுக மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் எம்.எல்.ஏ-விடம் கோரிக்கை

திருப்பூர், மார்ச் 14- மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தர மாக்க சட்டமன்றத்தில் வலியுறுத்தக்கோரி சனியன்று திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.குணசேகரனிடம் மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள்  கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் அவி நாசி, திருப்பூர் மற்றும் பல்லடம் கோட்டங் களில் உள்ள பிரிவு அலுவலகங்களில் 15 ஆண்டுகளுக்கு மேலாக கள உதவியா ளர்களுக்கான பணியிடங்கள் 90 சதவிகி தம் காலியாக உள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் 6 லட்சம் மின் இணைப்பு களை பராமரிக்கும் பணிகளை பல ஆண்டு களாக ஒப்பந்த தொழிலாளர்களே செய்து வருகிறார்கள். இவர்களை மின் வாரியம் கணக்கில் காட்டுவதில்லை. இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பணியின்போது, மின் விபத்தால் உயிரிழக்கும் சமயத்தில், தற் கொலை அல்லது அறிவிப்பில்லாமல் தன்னிச்சையாக பணியில் ஈடுபட்டதாக பொய்யான தகவல் மின்வாரிய அதிகாரி களால் காவல்துறையினரிடம் தெரிவிக் கப்படுகிறது. இதனால் இழப்பீடுகள் மற் றும் மருத்துவ உதவி கூட மறுக்கப்படுகிறது. இவ்வாறு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் விபத்தில் சிக்கிய 30க்கும் மேற்பட்ட ஒப்பந்த  தொழிலாளர்களில் 13 பேர் உயிரி ழந்துள்ளனர். மற்றவர்கள் படுகாயம் அடைந்தும், உடல் உறுப்புகளை இழந் தும் உள்ளனர். இதனால் அவர்களது குடும்பம் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது.  மேலும், ஒப்பந்த தொழிலாளர்கள் மின் வட்ட பணிகள் மட்டுமின்றி சுனாமி, சென்னையில் ஏற்பட்ட வர்தா மற்றும் கன்னியாகுமரியில் ஏற்பட்ட ஓக்கி புயல் நிவாரண பணிகளின் போதும் சேவை மனப்பான்மையுடன் திறம்பட பணியாற்றி மின்வாரியத்திடம் நற்சான்றிதழ் பெற்றுள் ளார்கள். இவ்வாறு 1997ஆம் ஆண்டிலி ருந்து ஒப்பந்த பணி செய்த ஆவணங்களை திருப்பூர் மாவட்டத் தொழிலாளர் ஆய்வா ளரிடம், மின்வாரிய அதிகாரிகள் முன்னி லையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தொழி லாளர் ஆய்வாளரும், அதனை ஆய்வு செய்து ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இதேபோல், நீதிமன்றமும் மாவட்டத் தொழி லாளர் ஆய்வாளரின் உத்தரவை அமல்ப டுத்த ஆணையிட்டுள்ளது.  ஆனால், மின் வாரியம் எங்களை பணி நிரந்தரம் செய்திட நடவடிக்கை எடுக்கா மல் இருந்து வருகிறது. இச்சூழலில் ஒப்பந்த தொழிலாளர்களில் பலர் 15 ஆண்டுகளுக்கு  மேல் பணி அனுபவம் உள்ளவர்களாக இருந்தாலும், 40 வயதை கடந்தவர்களாக இருப்பதால் தற்போது, மின்வாரியத்தில் நடைபெற்ற கேங்மேன் தேர்வில் விண்ணப் பிக்க தகுதி இல்லாதவர்களாக உள்ளனர். எனவே, தமிழக அரசும், மின்சாரத்துறை அமைச்சரும் எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக தலையிட்டு, ஒப்பந்தத் தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவ டிக்கை எடுக்க தாங்கள் வலியுறுத்த வேண் டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர். இம்மனுவை பெற்றுக் கொண்ட சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.குணசேகரன், அமைச்சரிடம் மனுவை அளித்து நடவ டிக்கை எடுக்க வலியுறுத்துவதாக தெரி வித்தார்.

;