திருப்பூர், மார்ச் 25- திருப்பூரில் அரசின் விதிகளை மீறி திறந் திருந்த டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்து ஆட்சியர் உத்தரவிட்டார். திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நோய் தடுப்பு குறித்து பல்வேறு விதமான விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெரிய வணிக நிறுவ னங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், வணிகம் மேற்கொள்ளும் நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் பார்கள் ஆகியவை வரு கின்ற மார்ச் 31 வரை மூடிட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி திருப் பூர் மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட அனைத்து விதமான கடைகளும் மூடிட மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட் டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திங்களன்று அனுப்பர்பாளையம் பிரதான பேருந்து நிலையம் மற்றும் சந்தைப்பேட்டை பகுதி களில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைக ளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப் போது அங்குள்ள மதுக்கூடத்தில் மது அருந் திக் கொண்டிருந்தவர்களை எச்சரித்து அனுப்பியதோடு திறந்திருந்த பார்களுக்கு சீல் வைத்திட உத்தரவிட்டார். மேலும், குமார் நகர், டவுன் ஹால் பகுதி மற்றும் கும ரன் சாலை பழைய பேருந்து நிலையம் மற்றும் பல்லடம் சாலை டி.கே.டி பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் திறந்தி ருந்த வணிக நிறுவனங்கள் மற்றும் கடை களையும் உடனடியாக மூடிடுமாறு உரிமை யாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறித்தினார். அதைத்தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள டாஸ் மாக் கடை மற்றும் உழவர் சந்தை கரைத் தோட்டம் அருகில் அமைந்துள்ள டாஸ் மாக் கடைகளுக்கு நேரில் சென்று பார்வை யிட்ட ஆட்சியர் சுற்றுப்புற பகுதிகளை சுகாதாரமாக பாதுகாத்திட பணியாளர்க ளுக்கு அறிவுறுத்தினார். மேலும், திருப் பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பினை வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டார். இவ்வாய்வின் போது திருப்பூர்(வடக்கு) வட்டாட்சியர் பாபு, திருப்பூர் (தெற்கு) வட் டாட்சியர் சுந்தரம் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.