tamilnadu

img

விவசாய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை கண்டித்து சிஐடியு காத்திருப்பு போராட்டம்

உடுமலை, ஜூன் 9- ஜெயின் இரிகேசன் நிறுவனத்தில் கடந்த 4 மாதமாக சம்பளம் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து திங்களன்று  எலைமுத்தூர் ஜெயின் இரிகேசன் சிஸ்டம்ஸ் லிட் நிறு வனத்தின் முன்பு சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலூகா ஏலையமுத்தூர் பகுதியில் ஜெயின் இரிகேசன் சிஸ்டம்ஸ் லிட் என்ற  விவ சாய பொருள்கள்  தயாரிக்கும்  நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு கடந்த  நான்கு மாதங்களுக்கான ஊதியம் வழங்காமல் உள்ளதை பல முறை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலை யில், சிஐடியு சார்பில் அரசு உடனடியாக தலையிட வழியுறுத்தி கடந்த மே மாதம் 21ம் தேதி நிறுவனத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது வரை சம்பளம் வழங்காத நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்தும், தொழிலாளர்க ளுக்கு நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் வேலை வழங் கக் கோரியும் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.

போராட்டம் நடைபெறும் இடத்திற்கு காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் தொழிற்சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் நிறுவனம், தொழிற்சங்கம் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் வரும் 31ம் தேதி நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் வேலையும் தருவது என்று உடன்பாடு ஏற்பட்டது. இதனால் தொழிலா ளர்களின் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் முடி வுக்கு வந்தது. முன்னதாக, நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் எஸ். ஜெகதீசன் தலைமை வகித்தார். போராட்டத்தை துவக்கி வைத்து மாநிலத்துணை செயலாளர் எம். சந்திரன் பேசினார். இதில்,மாவட்டக்குழு உறுப்பினர் ஜெ. கந்த சாமி மற்றும் ஜெயின் இரிகேசன் தொழிலாளர்கள் பால கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, காஜாமைதீன் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் முருகவேல், விவ சாய தொழிலாளர் சங்கத்தின் ரங்கராஜ் மற்றும் சிஐடியு நிர் வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;