tamilnadu

கழிவுநீர் கால்வாயில் விழுந்த மாடு மீட்பு

அவிநாசி, ஜூன் 14- அவிநாசி அருகே அ.குரும்பபாளை யத்தில் கழிவுநீர் கால்வாயில்  விழந்த பசுமாடு  உயிரோடு மீட்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், வேட்டுவபாளையம் ஊராட்சி, அ.குரும்பபாளையச்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு சொந்தமான பசு மாடுகள் அருகே உள்ள கிரின்லேண்ட் பகுதி யில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு பசுமாடு அப்பகுதியில் உள்ள  கழிவுநீர் கால்வாயில் விழுந்து மீள முடியமல் தத்தளித்தது.  இதையடுத்து அப்பகுதி மக்கள், பொக் லைன் இயந்திரம் மூலம் சாக்கடையின் இரு புறமும் குழி பறித்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு மாட்டை  உயிருடன் மீட்னர்.