tamilnadu

அன்னூர் அருகே கார், பேருந்து மோதி விபத்து திருப்பூர் செய்தியாளர், தாய் மரணம்

 திருப்பூர், ஜன. 29 - அன்னூர் அருகே நரியம்பள்ளி பகுதியில் பேருந்தும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் திருப்பூர் மாவட்ட டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தியாளர் கே.ராஜசேகர் (வயது 32), அவரது தாயார் கே.ஜமுனாராணி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி பெரியாயி பாளையம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி ஜமுனா ராணி (55). இவர்களது மகன் ராஜசேகர் (32). டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழில் திருப்பூர் மாவட்டச் செய்தியாளராக பணி செய்து வந்தார். இவரது சகோதரி பானுப்பிரியா (30). திருமணமாகி கண வர் புவனேஷ்வரனுடன் கோத்தகிரியில் வசிக்கிறார். மேலும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணி செய்து வருகிறார். ராஜசேகருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் சென் னையை சேர்ந்த கலைவாணி என்ற பெண்ணுடன் திரு மணம் நடைபெற்றது. தற்போது அவர் கர்ப்பமாக சென் னையில் அவரது தாயார் வீட்டில் உள்ளார். வரும் பிப்ர வரி 5ஆம் தேதி அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடை பெற இருந்தது. இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளை யத்தில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டு விசேஷ நிகழ்வில் பங்கேற்கவும், வளைகாப்பு நிகழ்வுக்கு அழைப்பு விடுக்க வும் தாயார் மற்றும் சகோதரி, அவரது இரண்டரை வயது மகன் இன்ப நித்திலன் ஆகியோருடன் ராஜேசேகர் வீட்டி லிருந்து காரில் புறப்பட்டு மேட்டுப்பாளையம் நோக்கி சென்றுள்ளார். அவிநாசி காவல் எல்லைக்கு உட்பட்ட நரியம்பள்ளி புதூர் அருகே சென்றபோது, ஊட்டியிலிருந்து மேட்டுப் பாளையம், அன்னூர் வழியாக மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து நேரிட் டது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் இருந்த ஜமுனாராணி பலத்த காயமடைந்து சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். காயமடைந்த ராஜசேகர், பானுப்பி ரியா,குழந்தைஆகிய மூவரும் கோவை தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ராஜசே கர் உயிரிழந்தார். பானுப்பிரியா, குழந்தை இருவரும்  தொடர் சிகிச்சையில் உள்ளனர். ஜமுனா ராணி உடல் அன் னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  சம்பவம் தொடர்பாக அவிநாசி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் இரங்கல்:
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறை, திருப்பூரில் உள்ள பத்திரி கையாளர் சங்கங்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலாளர் பாரதி தமிழன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

;