tamilnadu

img

சமூக அவலங்களுக்கு எதிராக ரௌத்திரம் பழக்குவது புத்தகங்களே! புத்தகத் திருவிழாவில் பேராசிரியர் இரா.காளீஸ்வரன் முழக்கம்

திருப்பூர், பிப். 2 – சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு  எதிராக கோபத்தைப் பழக்குவது புத்த கங்களே, எனவே புத்தக வாசிப்பு என்பது ரௌத்திரம் பழகுவதாகும் என்று லயோலா கல்லூரி பேராசிரியர் இரா.காளீஸ்வரன் கூறினார். திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் 17ஆவது புத்தகத் திருவிழாவின் மூன்றாம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற மேடை  நிகழ்வில் ரௌத்திரம் பழகு என்ற தலைப் பில் பேராசிரியர் இரா.காளீஸ்வரன் பேசியதாவது: ஐந்து வகை புத்தக வாசிப் புகள் உள்ளன என்று உலகப் புகழ்பெற்ற  எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் கூறியி ருக்கிறார். முதலில் உரத்த வாசிப்பு எனும் சத்தம் போட்டுப் படித்தல். ஆரம்பப் பள்ளி களில் குழந்தைகள் வாசிப்பது இந்த உரத்த வாசிப்புதான். இதன் மூலம் ரௌத்திரம் பழகுகின்றனர். இரண்டாவது குழு  வாசிப்பு. குழுவாக ஒரு புத்தகத்தைப் படித் துப் பகிர்ந்து கொள்ளும்போது தெளிவு கிடைக்கும். 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிப்போர் இந்த குழு வாசிப்பின் மூலம் அறிவுத் தெளிவு பெறுகின்றனர். மூன்றா வது காட்சி வாசிப்பு. கண்ணகி கால்  சிலம்பை ஒப்பிட்டு பாண்டிய மன்னனி டம் நீதி கேட்டது காட்சி வாசிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. நான்காவது அமைதி யான வாசிப்பு. அமைதியான வாசிப்பின் மூலம் இந்த சமூகத்தை உற்று நோக்கிப் புரிந்து உண்மையைத் தெளிந்து கொள்ள முடியும். அமைதி வாசிப்புக்கு எடுத்துக் காட்டாக கார்ல் மார்க்ஸ்-ஐ டால்ஸ்டாய்  கூறுகிறார். ஐந்தாவதாக ஆழ்ந்த வாசிப்பு. சமூகத்தைப் புரட்டிப் போட நினைப்பவர் கள் ஆழ்ந்து வாசிக்க வேண்டும். அம்பேத் காரை ஆழ்ந்த வாசிப்புக்கு உரியவராக கூறுகிறார் டால்ஸ்டாய். இப்படி வாசிப் பின் ஊடாக ரௌத்திரம் பழகச் செய்வது புத்தகங்களே. உலகில் பசித்த மனிதர்கள் இருக் கக்கூடாது என்று  அணையாத அடுப்பை வைத்து பசி போக்கிய வள்ளலார் ராம லிங்க அடிகளார் தமிழ்நாட்டு ரௌத்தி ரத்தின் அடையாளம். விழிப்புணர்வு இல் லாத நிலையில் இருந்து விழிப்புணர்வு பெறுவதும், அதில் இருந்து அறிவைப் பெறுவதும், அடுத்து திறனை வளர்த்துக் கொள்வதும், அறிந்து பெற்ற திறனில் இருந்து செயல் பழகுவதும் ரௌத்திரம் பழகுவதாகும் என்று சமூகக் கல்வி அறி ஞர் பாவ்லோ பிரையரே கூறுகிறார். எனவே புத்தகங்களின் மூலம் ரௌத்திரம் பழகுங்கள் என்று காளீஸ்வரன் கூறி னார். முன்னதாக இந்த நிகழ்வுக்கு முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்க வேல் தலைமை வகித்தார். வரவேற்புக்குழு சார்பில் பா.ஞானசேகர் வரவேற்றார். வீனஸ் கே.பழனிசாமி, பிவிஎஸ் பி.முருக சாமி, பிளவர் எஸ்.சுப்பிரமணியம், பில்டர்ஸ் அசோசியேசன் எஸ்.ஜெயபால், ஜெஆர்எம் என்.பழனிசாமி, கிரி ப்ளூ மெட்டல் ஆர்.பார்த்திபன், பிரிமியர் எம்.சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வனத்துக்குள் திருப்பூர் திட்ட இயக்குநர் குமார் துரைசாமி வாழ்த்திப்  பேசினார். இதைத் தொடர்ந்து புகிரி அரங்காட் டம் சார்பில் எழுத்தாளர் கி.ராஜநாராய ணன் கதையில் பேராசிரியர் ராம்ராஜ் நெறியாள்கையில் நாற்காலி நாடகம் நடத்தப்பட்டது. இந்த நாடகம் பார்வையா ளர்களை வெகுவாக ஈர்த்தது. நிறைவாக இரா.பழனிசாமி நன்றி கூறினார்.

;