tamilnadu

img

அவிநாசி புதுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்வில் முறைகேடு கே.சுப்பராயன் எம்.பி. குற்றச்சாட்டு

திருப்பூர், ஜன. 5- அவிநாசி புதுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்வில் முறைகேடு  நடைபெற்றுள்ளதாக கே.சுப்பராயன் எம்.பி. குற்றஞ்சாட்டி யுள்ளார். திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பி னர் கே.சுப்பராயன் ஞாயிறன்று திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது அவர் கூறியதாவது, அவிநாசி புதுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் வெற்றியில் முறை கேடு நடைபெற்றுள்ளதாக குற்றஞ் சாட்டினார். இந்திய அரசியல் நிலை மையில் சுதந்திரம் பெற்ற காலத்தி லிருந்து இன்று வரை பல்வேறு நெருக் கடிகள் வந்துள்ளன. ஆனால் இன்று போல் வேறு என்றும் இல்லை. இந்தி யாவிற்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. முப்படைக்கும் ஒரே தளபதி என்பது ஆபத்தின் ஆழத்தை வெளிப்படுத்தி யுள்ளது. பிஜேபி ஆட்சியைப் பயன்ப டுத்தி ஆர்எஸ்எஸ் தனது கொள் கைகளை நிறைவேற்றி வருகிறது.  பொதுமக்கள் தங்கள் உரிமைக் காக ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ நடத்துவது அடிப்படை உரிமை. ஆனால் பாஜக அரசு மக்கள் போராட் டங்களை நசுக்குகின்றது. ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்திற்கு பிரச்சாரம் செய்வதை மறுத்து வருகின்றது காவல்துறை.  தமிழ்நாட்டின் உரிமைகளை பிஜேபி அரசாங்கம் அபகரித்துக் கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில்  காவிரிப் பிரச்சனை முதல், பண் பாட்டு ரீதியான அனைத்தையும் அழிக்க நினைக்கிறது. இதற்கு உறு துணையாக நிற்கிறது தமிழக அரசு. பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அர சாங்கத்தின் மீது 25 குற்றச்சாட்டுக் களை முன் வைத்து, அவற்றை கவர் னரிடம் ஆவணங்களாகவும் ஒப்ப டைத்தது. அதை உண்மை என்று நிரூ பிக்கவும் இல்லை, பொய் என்று கூற வும் இல்லை. இப்படி  குற்றம் சொன்ன கட்சி மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் சோலியை முடி என்று சொன்னது ஆட்சியை பற்றி தான். நைனார் நாகேந்திரன் வைரமுத்துவை  கொலை செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக மிரட்டினார். அதேபோல் எச்.ராஜா மாணவர் மீது குண்டு வீச வேண்டும் என்று பகிரங்கமாக சொன்னார். இதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. மெரினா கடற்கரையில் பாஜக வினர் அனுமதியின்றி போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் நடைபெற்ற  உள்ளாட் சித் தேர்தல் ஜனநாயக கேலிக்கூத்தா கும்.  உதாரணமாக அவிநாசி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சியில் அதிக வாக்கு பெற்றவர்களை தோல்வி  என்று அறிவித்து, அண்ணா திமுக  கூட்டணியில் குறைந்த வாக்கு பெற்ற  பிஜேபி வேட்பாளர் வெற்றிபெற்ற தாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத் தில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி  அறிவிப்பு 40 சதவிகிதம் முறைகேடா கத்தான் நடந்துள்ளது.  இந்நிலையில், உடனடியாக பேரூ ராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர் தலை நடத்த வேண்டும். திருப்பூரை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்து மூன்று வருடங்கள் கடந்துவிட்டது. தற்போது டவுன்ஹால் , பள்ளிக்கூடத்தை இடித் திருக்கின்றார்கள். பிரசவம் பார்க்கும் மருத்துவமனையை குப்பைமேட்டில் கட்டி வைத்துள்ளனர். இதன் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த அரசு விழாவில் தெற்கு தொகுதி எம்எல்ஏ மட்டும் கலந்துகொண்டுள் ளார். எம்.பி. என்கின்ற முறையில் எனக்கு எந்தவித அழைப்பும் விடுக் கப்படவில்லை.  திருப்பூரில் நெருக்கடி நிறைந்த எல்.ஆர்.ஜி கல்லூரியில் இருந்து அவிநாசி, தண்ணீர்பந்தல் வரை இரண்டு புறங்களிலும் உள்ள சாலை களை இணைக்கின்ற வகையில் மேம்பாலம் அமைத்திருந்தால் நக ரத்திற்குள் போக்குவரத்து நெருக்கடி இருக்காது. திருப்பூர் பூ மார்க்கெட் பேருந்து நிலையத்தை இடித்து அடுக் குமாடி கட்டிடங்கள் கட்டுவது உள் நோக்கம் கொண்டவையாக இருக்கின் றது. இவ்வாறு அவர் பல்வேறு குற் றச்சாட்டுகளை அடுக்கினார்.

;