tamilnadu

அவிநாசி: 10 நாட்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தம் - பொதுமக்கள் தவிப்பு

அவிநாசி, அக். 28- அவிநாசி கிராமப் பகுதி களில் 10 நாட்களாக குடிநீர் விநி யோகம் நிறுத்தப்பட்டதால் பொது மக்கள் அவதியடைந்துள்ளனர். அவிநாசி ஒன்றியத்தில் கருவ லூர், ராமநாதபுரம், நம்பியாபா ளையம் உள்ளிட்ட ஊராட்சிப் பகு திகளில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரு கின்றனர். இப்பகுதியில் விநியோ கம் செய்து வந்த குடிநீர் பத்து நாட் களுக்கும் மேல் நிறுத்தப்பட்டுள் ளது. மழை காரணமாக குடிநீர் விநி யோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.  சாயக் கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் விடும் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், மழை காலங்களில் தண்ணீரை சுத்திக ரித்து வழங்க முடியவில்லை என்பது ஏற்புடையதல்ல. இந்நிலையில், பொதுமக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து கருவலூர் பகுதி யைச் சேர்ந்த நாராயணசாமி கூறு கையில், குடிநீர் விநியோகத்தை  முன்னறிவிப்பின்றி நிறுத்திய காரணத்தினால் பொதுமக்கள் விலை கொடுத்து குடிநீரை வாங் கும் நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளனர். கோடை காலத்திலும் தண்ணீர் பிரச்சனை, மழை காலத் திலும் தண்ணீர் பிரச்சனை, தீபாவளி நாளிலும் கூட தண் ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின் றனர். குடிக்கின்ற தண்ணீரைகூட தேவையான அளவுக்கு குடிக்க  முடியாத நிலைக்கு தள்ளப்பட் டுள்ளோம்.  இந்த நிலை தொடரு மானால் பொது மக்களின் தன்னெ ழுச்சியான போராட்டங்களைத் தவிரக்க முடியாது எனக் குறிப் பிட்டார்.  இது தொடர்பாக குடிநீர் வடி கால் வாரிய அதிகாரியிடம் கேட்ட போது, முதலாவது குடிநீர் திட்டத் தின் மூலம் குடிநீர் விநியோகிக் கப்படும் பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை ஹிட்டாச்சி இயந்திரத்தின் மூலம் தான் சரி செய்ய முடியும். 110 அடி அளவில் பில்லர் போடப்பட்டு அதன் வழியாக பைப்புகளை சரி செய்தால்தான் குடிநீரை விநியோ கிக்க முடியும். இரண்டாவது குடி நீர் திட்டத்தின் பொது குழாய் ஒவ்வொரு பகுதியிலும் இருந்தி ருந்தால் குடிநீர் தட்டுப்பாடு இந்த அளவிற்கு நீடிக்காது. ஆயினும் வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் குடிநீர் விநியோகிக்கப்படும் என கூறினர்.

;