tamilnadu

img

அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி காங்கேயத்தில் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர், மார்ச் 9 – வெள்ளகோவில் பகுதியில் வசிக்கும் அருந்ததியர் இன மக்களின் அடிப்படை உரிமை களை வலியுறுத்தி, காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி னர். இதையடுத்து அந்த மக்க ளிடம் காங்கயம் வட்டாட்சியர் திங்களன்று பேச்சுவார்த்தை நடத்தினார். காங்கயம் வட்டம், வெள்ள கோவில் பகுதியில் உள்ள அருந்த தியின சமூக மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி, காங் கயம் வட்டாட்சியர் அலுவல கத்தில் அப்பகுதி மக்கள் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட் டனர். இந்நிலையில், போராட் டக்காரர்களிடம் காங்கயம் வட் டாட்சியர் ஆ.புனிதவதி உள் ளிட்ட அதிகாரிகள் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் வெள்ளகோவில், உப்புப்பாளை யம் கிழக்கு பகுதியில் வசிக்கும் சொந்த வீடு இல்லாத அருந்ததிய குடும்பங்களுக்கு முன்னுரிமை அடைப்படையில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குவது, வெள்ளகோவில் ஒன்றியத்துக்கு உள்பட்ட தாசவநாயக்கன்பட்டி, உத்தமபாளையம் கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்க ளின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தகுதியான பயனாளி களுக்கு பட்டா வழங்குவதற்கான தொடர் நடவடிக்கை எடுப்பது, அருந்ததியர் மற்றும் தலித் மக்க ளுக்கான பொது மயான உரி மையை உறுதிப்படுத்தவது உள்ளிட்ட 7 கோரிக்கைகளுக்கு நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டதாக காங்கயம் வட் டாட்சியர் ஆ.புனிதவதி தெரி வித்தார். இப்பேச்சுவார்த்தையில் தலித் மக்களின் சார்பில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் தாலுகா செயலாளர் செல்லமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கயம் பொறுப்பாளர் திருவேங்கடம், தலித் விடுதலை இயக்கத்தின் மாநில இணை பொதுச் செயலர் ச.கருப்பையா, மாவட்டத் தலை வர் ஆறுமுகம், மாவட்ட செயலர் குமார்,  பாமக முன்னாள் துணைத் தலைவர் மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வருவாய்த் துறை சார்பில் வட்டாட்சியர் ஆ.புனித வதி, ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் எஸ்.ஷைலஜா, காங்கயம் காவல் ஆய்வாளர்  ரவிக்குமார், வெள்ள கோவில் காவல் ஆய்வாளர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;