tamilnadu

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருப்பூர் மாவட்டத்தில் 45 ஆயிரம் பேர் விண்ணப்பம்

திருப்பூர், ஜன. 14 – திருப்பூர் மாவட்டத்தில் வாக் காளர் பட்டியல் சிறப்பு முகாமில்  புதிதாக பெயர் சேர்க்க 45 ஆயிரத்து  180 பேர் விண்ணப்பித்துள்ளனர். இத்துடன் திருத்தம், நீக்கம் ஆகிய வற்றுக்காக விண்ணப்பித் தோரையும் சேர்த்து மொத்தம் 56 ஆயிரத்து 336 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் வாக் காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு தினங்கள்  சிறப்பு முகாம்கள் அந்தந்த  வாக்குச்சாவடிகளில் நடத்தப் பட்டன. இதில் பெயர் சேர்த்தலுக்கு  மட்டும்  மாவட்டம் முழுவதும் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 45ஆயிரத்து 180 பேர் விண்ணப்பித் துள்ளனர். 2020ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியை 18 வயது பூர்த்தி அடைந்த தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் – 2020 மேற் கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் கால அட்டவணை வெளியிட்டிருந்தது.  இதன்படி கடந்த 23ஆம் தேதி  திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம்,  அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு வரைவு  வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டது. இத்துடன் மேற்கண்ட தொகுதி களில் உள்ள 2484 வாக்குச்சாவடி களை உள்ளடக்கிய 1028 வாக்குச் சாவடி மையங்களிலும், வாக்காளர்  பட்டியலில் பெயர் இடம் பெறாத வர்கள், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும், பெயர்  நீக்கவும் மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி  மாற்றம் செய்வது ஆகிய பணி களுக்குச் சிறப்பு முகாம் நடத்தப் பட்டது. ஜனவரி 4, 5 மற்றும் 11, 12 ஆகிய  4 நாட்கள் நடத்தப்பட்ட இந்த சிறப்பு  முகாமில் 56 ஆயிரத்து 336  விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெயர் சேர்த்தல் தொடர்பாக 18-19 வயது உடையோரில் 15ஆயிரத்து 468 விண்ணப்பங்களும், 20-25 வயது கொண்டோரில் 13ஆயிரத்து 935 விண்ணப்பங்களும், 25  வயதுக்கு மேற்பட்டோர் 15 ஆயிரத்து 777 விண்ணப்பங்கள் என  மொத்தமாக 45ஆயிரத்து 180 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுதவிர பெயர் நீக்கம் தொடர் பாக 2ஆயிரத்து 683 விண்ணப் பங்கள், பெயர் திருத்தம் தொடர் பாக 4ஆயிரத்து 646 விண்ணப் பங்கள், தொகுதிக்குள் முகவரி மாற்ற 3ஆயிரத்து 827 விண்ணப் பங்கள் பெறப்பட்டன என்று தேர்தல் தொடர்பான அலுவலர்கள் தெரிவித்தனர்.

;