tamilnadu

img

5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை கைவிடுக மாவட்ட ஆட்சியரகத்தில் எஸ்எப்ஐ முறையீடு

திருப்பூர், டிச. 3 - 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதைக் கைவிட வேண்டும் இந்திய மாணவர் சங்கத்தினர் திருப் பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர். இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் அளித்த மனுவில் குறிப்பிட்டிருப்ப தாவது: திருப்பூர் மாநகராட்சி பழனி யம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளி யில் மாணவிகளுக்கு இலவச மடிக் கணினியை உடனடியாக வழங் கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னதாக, 2017-18 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவிகளுக்கு முறையாக மடிக்கணினி வழங்க வேண்டும் என்று அப்பள்ளியின் மாணவிகள் கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களில் போராட் டத்தில் ஈடுபட்டனர். ஆனால் நிர் வாகம் முறையாக மடிக்கணினி வழங்காமல் இன்று வரை இழுபறி செய்து வருகிறது.  இந்நிலையில் தற்போது போராட் டத்தில் ஈடுபட்டதால் மடிக்கணினி வழங்க முடியாது என பள்ளி நிர்வா கம்  மிரட்டி வருகிறது.  இதனைக் கைவிட்டு மாவட்ட கல்வித்துறை உடனடியாக விலையில்லா மடிக்க ணினி வழங்க ஆவண செய்ய வேண் டும்.    இதேபோல், தமிழகத்தில் 5 மற் றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வை ரத்து செய்ய வேண் டும் எனவும் மனுவில் குறிப்பிட்டி ருந்தனர்.  இந்த மனுவினை மாண வர் சங்க மாவட்ட தலைவர் பிரவீன் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் கல்கிராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் மோகனப்பிரியா மற்றும் தனசேகர் உள்ளிட்ட மாண வர்கள் அளித்தனர்.

;